இரண்டாம் ஜாமங்களின் கதை

இரண்டாம் ஜாமங்களின் கதை
சல்மா அவர்கள் எழுதியது.
இஸ்லாமிய சமூகத்தை பற்றிய படைப்பாக்கப் பிரதிகள் தமிழில் அதிகம் வெளியாவதில்லை. வெளிவந்தவையும் ஓர் ஆணின் பார்வையில் இஸ்லாமிய வாழ்க்கையை முன்வைப்பவை. அவற்றில் இடம் பெறும் பெண்கள். மங்கலான சித்திரங்கள் மட்டுமே. சல்மாவின் இந்த நாவல் இஸ்லாமியப் பெண்ணுலகைப் பெண்ணின் கண்களால் பார்க்கிறது. ஆறு குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் ரகசியங்களையும் இச்சைகளையும் அவர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளையும் அவர்கள் அடைய விரும்பும் சுதந்திரத்தையும் காதலையும் காமத்தையும் பிறழ்சுகளையும் உடலியல் துன்பங்களையும் சுரண்டல்களையும் நுட்பமாகவும் சமயங்களில் பகிரங்கமாகவும் பகிர்ந்து வைக்கிறது. பெண் தன்னைப் பெண்ணாகப் உணர்வது ஆண்கள் அயர்ந்திருக்கும் 2ஆம் ஜாமத்தில் என்ற வெளிப்படுத்துகிறது.ஒருவகையில் இந்தப் பெண் நோட்டம் ஆணை தொந்தரவு செய்யக் கூடியது.இந்தப் பார்வை தமிழ்ப் படைப்பில் புதிது.