இப்போதே நிர்மாணிப்போம் 21ஆம் நூற்றாண்டின் சோஷலிசம்

இப்போதே நிர்மாணிப்போம் 21ஆம் நூற்றாண்டின் சோஷலிசம்
மைக்கேல் எ.லெபோவிச் அவர்கள் எழுதியது. தமிழில்: அசோகன் முத்துச்சாமி அவர்கள் எழுதியது.
20ஆம் நூற்றாண்டில் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றிய மார்க்சிய சக்திகள், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியிலேயே கூடுதல் கவனம் செலுத்தின.இதர சில முக்கியமான அம்சங்களில் போதுமான கவனம் செலுத்தத் தவறின. புதிய சமுதாயத்தைப் படைப்பதற்கான போராட்டத்தில் நாம் பழைய சமுதாயத்தை மட்டும் மாற்றுவதில்லை, நாம் நம்மையே மாற்றி கொள்கிறோம்.மார்க்ஸ் குறிப்பிட்டது போல அந்த புதிய சமுதாயத்தைப் படைப்பதற்கு தகுதியுள்ளவர்களாக நாம் நம்மை ஆக்கிக் கொள்கிறோம். 20ஆம் நூற்றாண்டு சோஷலிச அனுபவங்கள் பலவற்றின் தோல்விக்கு பிரதான காரணங்கள் என்ன என்று ஆய்வுசெய்கிறார் லெபோவிச்.அதற்க ஆதாரடாக இதுவரை தமிழ் வாசகர்கள் அறிந்திராத யூகோஸ்லாவிய சோஷலிச அனுபவங்களையும் வெனிசுலாவின் சமீபத்திய அனுபவங்களையும் விவரிக்கிறார். மனிதர்களின் முழுமையான வளர்ச்சியே லட்சியம். சோஷலிசம் அதை அடைவதற்கான பாதை என்கிறார் அவர்.மார்க்ஸ் கூறியபடி மனிதர்கள் அனைவரின் நலனுக்காகவே மனித ஆற்றல்கள் அனைத்தும் வளர்ச்சி என்பதுதான் உண்மையான லட்சியம்.