இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்

இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்
மோட்சம் மற்றும் அவித்யை.கர்மம் மற்றும் யோகம் ஆகிய கருத்துக்கள் இந்தியத் தத்துவத்தின் தலையாய முக்கியத்துவத்திற்கான ஆதாரங்களாகும் என்று நம்மிடம் சொல்வதன் மூலம் தங்கள் தனிச்சிறப்பான பெருமையுணர்வை நமது ஆசிரியர்கள் அனுபவித்து வந்த ஒரு சூழலில் வளர்ந்தவர்கள் நாம்.இந்தக் கருத்துகள் எந்த அளவுக்குப் புனிதமானவையாகக் கருதப்பட்டன என்பது குறித்த நமக்கு மாயை எதுவும் கிடையாது.இந்தக் கருத்துக்களைப் பற்றிய விமர்சனப் பார்வையைக் கொண்டிருப்பது என்பது.மிகப்பெரும் துன்பத்தை வலியச்சென்று தேடிக்கொள்வதாகவும்.தேசவிரோத உணர்வுடையவர் என்று சந்தேகப்படுவதற்கு இடங்கொடுப்பதாகவும் கூட இருக்கும் என்று தோன்றுகிறது.ஆனால் பல நூற்றாண்டுக் காலமாக நாம் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.குறிப்பிட்டதொரு காலத்தில் செல்வாக்கு வகித்தது என்பதற்காகவே அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவசியமில்லை உடன்கட்டையேறுதல்(சதி),விதவைத்திருமண எதிர்ப்பு,தீண்டாமை ஆகியவையும் கூட நமது நாட்டில் இதே அளவுக்குச் செல்வாக்கு வகித்தவை அல்லவா?இருப்பினும்.இவற்றை எதிர்த்து ஒய்வொழிச்சலற்ற போராட்டத்தை நடத்திய சூழல்தான் ராம்மோகன்.வித்யாசாகர்.காந்தி ஆகியோரை நமது சமூகச் சீர்திருத்தவாதிகளிலேயே மகோன்னதமானவர்களாக மாற்றியது.