இந்திய ஓவியம் (கிழக்கு)

இந்திய ஓவியம் (கிழக்கு)
இந்திய ஒலியக் கலையை முறைப்படி தமிழில் அறிமுகம் செய்யும் முக்கியமான முயற்சி இந்நூல்.
பழங்குடி ஓவியங்கள், கிராமிய ஒவியங்கள், காஷ்மிர் ஓவியங்கள், ராஜஸ்தான் ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், நேபாள ஒவியங்கள், சிற்றோவியங்கள் என்று தொடங்கி இந்திய ஓவிய வரலாற்றில் இடம்பெறும் பல முக்கிய ஓவியப் பாணிகள் இத்நூலில் எளிமையாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
அழகியவை விவரிப்பது மட்டுமல்ல இந்தப் புத்தகத்தின் நோக்கம். குறிப்பிட்ட ஓவியப் பாணி எப்போது, ஏன் அறிமுகமானது? அதன் வரலாற்றுப் பின்னணி என்ன? ஓவியங்களை எப்படி அணுகவேண்டும்? அவற்றிலுள்ள செய்திகளை எப்படி உள்வாங்கிக்கொள்ள வேண்டும்? நம் கடந்த கால வரலாற்றைப் புரிந்து கொள்ள ஓவியங்கள் பயன்படுமா? இப்படி நூல் நெடுகிலும் விவாதங்களும் விளக்கங்களும் பரவிக் கிடக்கின்றன.கலை, இலக்கியம், வரலாறு, சமூகவியல் ஆகிய துறைகளில் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அவசியமான புத்தகம்.