FD ilakanaviyal-45612.jpg

இலக்கணவியல்

0 reviews  

Author: ச.இராசாராம்

Category: ஆய்வுக் கட்டுரை

Stock Available - Shipped in 1-2 business days

Price:  690.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இலக்கணவியல்

இலக்கண உருவாக்கம் சூனியத்தில் நிகழ்வதன்று. இலக்கண உருவாக்கம் ஒவ்வொரு காலகட்டதில் சமூகம்,அரசியல், கல்வி மற்றும் மொழி மாற்றங்கள் சார்ந்த அழுத்தங்களின்  வெளிப்பாடு.இலக்கணத்தை எழுதுவதற்க்கு ஒவ்வொரு இலக்கணக் கலைஞனுக்கும் வலுவான காரணங்களும் சமூகப்பொறுப்பும் உள்ளன. இவ்விலக்கண அரசியல் பின்னணியில் இலக்கணத்தில் பல்வேறு பரிமாணங்களின் பிற சமூக விஞ்ஞானங்களோடுள்ள தொடர்பு பன்முக நோக்கில் அணுகப்பட வேண்டும். இலக்கணம் புனிதமானது: மாறாதது என்னும் பழைமையற்றைக் கைவிட்டு யதார்த்த மொழி நிலையைப் பூதக்கண்ணாடிக்கொண்டு பார்க்கும் மனபாங்கு வளர வேண்டும்.

இலக்கணம், ஒரு சமூக உற்பத்திப் பொருள். எனவேதான் இதன் மீது சமூகத்தின் அடையாளப்படுத்தலும் அழுத்தமாக உள்ளது. இந்நிலைபாட்டை தெளிவாக் வரையறுத்துக் கொண்டு 'இலக்கணவியல்' என்னும் ஒரு சமூக விஞ்ஞானத் துறைப்படிப்பாக அதன் மீக்கோட்பாட்டையும் மீக்கோட்பாட்டின் அடிப்படையிலான கோட்பாடுகளையும் முன்வக்கிறது இந்நூல்.