என் கேள்விக்கு என்ன பதில் (கிழக்கு)

என் கேள்விக்கு என்ன பதில் (கிழக்கு)
வயதில் மூத்தவருடன் உடலுறவு கொள்ளலாமா? எந்த வயது வரை உடலுறவு கொள்ளலாம்? ஓரினச்சேர்க்கை சரியா? தவறா? விந்து முந்துவதை சரி செய்ய இயலுமா? சுய இன்பத்தால் ஆண்மை குறையுமா? ஆண்களின் பாலியல் பிரச்னைகள் என்னென்ன? செக்ஸில் முழு இன்பம் பெறுவது எப்படி? பெண்களின் மார்பகங்கள் கவர்ச்சிப் பொருளா? இப்படிப்பட்ட ஏராளமான அந்தரங்க கேள்விகளுக்கான தெளிவான, விரிவான பதில்களை உள்ளடக்கிய இந்தப் புத்தகம், உங்களின் செக்ஸ் ஆலோசகராக இருக்கப்போவது உறுதி. நூலாசிரியர் டாக்டர் டி. காமராஜ், பாலியல் மருத்துவத்தில் இந்தியாவிலேயே முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்றவர். சென்னையில் தான் இயக்குநராக உள்ள ஆகாஷ் கருவாக்க மையத்தின் மூலம் குழந்தையின்மையைப் போக்கும் நவீன சிகிச்சை முறைகளைச் செயல்படுத்தி வருகிறார். இவர், ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் ஏசியா - ஓஸியானிக் ஃபெடரேஷன் ஆஃப் செக்ஸாலஜி என்ற அமைப்பின் துணைத் தலைவராக உள்ளார்.