எல்லோருக்கும் எப்போதும் உணவு

எல்லோருக்கும் எப்போதும் உணவு
இந்திய வேளாண்மை தற்சமயம் ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறது.
ஒரு புறம் சுற்று சூழல் பொதுக் கொள்கை முடிவுகளால் சுற்று சூழல் பாதிக்கப்பட்டும் மறுபுறம் மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தும் எண்ணற்ற சத்துணவுத் திட்டங்கள் இருந்தும் உலகிலேயே அதிக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சத்துக் குறைபாடுகளுடன் இந்தியாவில் வசிக்கிறார்கள். எனவே இத்தருணத்தில் பசுமை புரட்சியால் சுற்று சூழலை பாதிக்காத மாற்றம் ஏற்பட்டாக வேண்டும். அதற்குரிய தொழில்நுட்பங்களை அனைவருக்கும் சென்றடையச் செய்ய வேண்டும். வளம் குன்றா மற்றும் சமமான உணவு பாதுகாப்பு முறைகளை வளர்ப்பதுதான் இந்தியாவில் இன்றைய அவரசத் தேவையும் குறிக்கோளும் ஆகும்.
இந்த நூலை எழுதிய பேராசிரியர் மா.சவாமிநாதன் உலகில் தலைசிறந்த வேளாண் விஞ்ஞானி ஆவார். அவர் இந்நூலில் முழுமையான உணவு உற்பத்தியில் உள்ள இடையூறுகளை தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார். நிரந்தர பசுமைப் புரட்சி மற்றும் சிறு நில வேளாண்மை ஆகிய இரண்டும் பசியில்லா பாரதத்திற்கு மிக முக்கிய பஙகாற்றும். இத்தகைய கருத்துக்களை மிக அழகாக இந்நூலில் பேராசிரியர் பதிவு செய்துள்ளார்.
இந்த அபூர்வமான கட்டுரைத் தொகுப்பு வளமான சூழலியல் மற்றும் என்றென்றும் பசுமைப் புரட்சியின் முக்கிய பகுதிகளை பல்வேறு பரிமாணத்தால் விரிவாகவும் அருமையாகவும் எடுத்துரைக்கிறது.