டைரி

டைரி
கடமைகள் மட்டுமே வலியுறுத்தப்படும் நமது பண்பாட்டில் உரிமையும், நீதியும் அந்தக் கடமைகளையொட்டி, அவரவர் படிநிலைக்குத் தகுந்தபடியே கிடைக்கிறது. எனவே நமது டைரிகள் நாட்குறிப்பாக மட்டுமே இருக்கிறது. வாழ்வை, மனவுணர்வுகளை, உண்மையை வெளிப்படுத்தும் ஆனி ஃபிராங்க்கின் டைரியைப் போன்ற படைப்புகள் வெளிவர நூற்றாண்டுகள் ஆகலாம்.
சமூக அமைப்பில் நமக்குக் கிடைக்கும் சில தனிச்சலுகைகள் சந்தர்ப்பத்தின் காரணமாக வாய்க்கபெற்றாலும், அந்தப் படிநிலைகளை வலுவாக்கும் கடமைகளுடனே அவை தரப்படுகின்றன. அவற்றைத் தக்கவைத்துக் கொள்ள வெவ்வேறு வடிவங்களில் சுயமரியாதையையும் சுதந்திரத்தையும் பலியிட வேண்டியிருக்கிறது. செய்யக்கூடிய தியாகங்களும் அந்தப் படிநிலைகளை நிலைநிறுத்தவே. அதற்கு அன்பு, காதல், பாசம், பண்பாடு, புனிதம், தியாகம், பக்தி என இடத்துக்குத் தக்க வண்ணம் பூசி அழகாகக் காட்சிப்படுத்தலாம்.