டிப்ஸ் (உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும்)

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
டிப்ஸ் (உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும்)
மருத்துவம் படித்தால்தான் வைத்திய ஆலோசனை சொல்ல முடியும். பொறியியல் படித்தால்தான், கட்டுமானப் பணிகளுக்கு ஆலோசனை சொல்ல முடியும். ஆனால், அனுபவப் படிப்பை மட்டுமே பிரதானமாக வைத்துக்கொண்டு இல்லத்தரசிகளாலும் ஆலோசனை சொல்ல முடியும். அதுதான் 'டிப்ஸ்'.
காலையில் எழுந்தவுடன் டூத் பிரஷ்ஷை ஸ்டாண்டில் இருந்து எடுப்பது முதல் இரவு படுக்கையறை செல்வது வரை இல்லத்தரசிகள் சந்திக்கும் எத்தனையோ சின்னச் சின்னப் பிரச்னைகளை, அனுபவங்கள் காரணமாக எளிதில் சமாளிக்கவும் கற்றுத் தேர்கிறார்கள். இந்த வகையில், நாங்கள் கண்டுபிடித்த(!) சமாளிப்பு முறைகளை 'அவள் விகடன்' இதழ் ஆரம்பித்த நாள் முதலே 'டிப்ஸ்'களாக வாசகிகள் பகிர்ந்துகொண்டு வருகிறார்கள்.