தேவதை புராணம்

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
தேவதை புராணம்
2011-ல் தமிழ் பேப்பர் தளத்தில் தினசரித் தொடராக பா. ராகவன் இதை வெளியிட்டார். இங்கே ஒரு பெண் காதல் செய்கிறாள். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என ஏழ் பருவங்களிலும் மாறுதலுறும் மனதையும் உடலையும் வைத்துக் கொண்டு விதவிதமாகக் காதலிக்கிறாள். அதைத் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறாள். அந்தப் புலம்பல்களே இந்த 150 சிறுகவிதைகள். காதல் எனும் செந்தீயில் சொர்ணம் உருகுவது போல் இதில் பெண்மை துளித்துளியாய் வழிகிறது. ஏதேன் தோட்ட ஏவாள் போல ஆர்வத்துடன் ஒருபுறமும் நாளை உலகம் அழியப் போகும் ஆவேசத்துடன் மறுபக்கமும் காதலில் திளைக்கிறாள். அவள் தேவதை ஆவதே தன் காதலின் வழிதான்!