சினிமா கோட்பாடு

சினிமா கோட்பாடு
தமிழில் ;- எம்.சிவக்குமார்
சினிமா இருபதாம் நூற்றாண்டில் பிறந்த ஒரே கலையாகும். ஆரம்பத்தில் அசையும் படங்கள் என்பதே மக்களுக்குப் பெரும் அதிசியமாக இருந்தது. துவக்கத்தில் வெறும் ஒரு தொழில் நுட்ப அதிசியமாக மட்டுமே இருந்த சினிமா எப்படி படிப்படியாக தனித்தொரு புதிய கலையாக மாறியது? அவ்வாறு மாறுவதற்கு அடிப்படையாக இருந்த விதிகள் என்னென்ன? இந்த புதிய கலையைப் புரிந்து கொள்ள புதிய அறிதலும் புதிய உணர்தலும் மக்களுக்கு தேவைப்பட்டன. சினிமாக் கலை வளர வளர அந்த புதிய அறிதல் மற்றும் உணர்தலும் எவ்வாறு வளர்ந்தது? போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பதன் மூலம் சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, அழகியல் மற்றும் சமூகவியல் குறித்த அழமான கருத்துக்களை மிக எளிமையான முறையில் சொல்கிறது இப்புத்தகம்.
நாம் வாழ்கின்ற நூற்றாண்டின் ஒரு புதிய கலையான சினிமாவை ஆக்கப் பூர்வமாக உபயோகிப்பதற்க்கு, மக்களின் சினிமா பற்றிய ரசனையும் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். அதற்கு சினிமா கோட்பாடு பற்றிய அறிவு எந்த அளவு அவசியம் என்பதை வலியுறுத்துகிறது இப்புத்தகம். திரைப்படத் துறையில் இருப்பவர்களுக்காக மட்டும் அல்லாமல், சாதாரண மக்கள் மற்றும் திரைப்பட ரசிகர்களை மனதில் கொண்டு விசேஷமாக எழுதப்பட்டது இப்புத்தகம். சினிமா கோட்பாடு பற்றி முதன் முதலாக எழுதப்பட்ட புத்தகங்களில் ஒன்றாக மட்டும் இல்லாமல், இது நான் வரைக்கும் சினிமா பற்றிய ஒரு மிகச் சிறந்த புத்தகமாகவும் உலகெங்கும் போற்றப்படுகிறது. இந்திய மொழி ஒன்றில் இப்புத்தகம் வெளிவருவது இதுவே முதல் தடவை.