புத்தனாவது சுலபம்

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
புத்தனாவது சுலபம்
மனிதர்கள் கசப்பையும் ஏமாற்றத்தையுமே வாழ்நிலையாகக் கொண்டுவிட்ட ஒரு காலத்தின் சாட்சியங்கள் எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கதைகள். மனித மனதின் சொல்லித் தீராத விசித்திரங்களிலிருந்து பிறக்கும் அபத்த நிலைகளின் வழியே புறக்கணிப்பின், தனிமையின் அவமதிப்பின் எல்லையற்ற கனத்த இருளின் வழியே இக்கதைகளின் பாத்திரங்கள் நடந்து செல்கின்றன. அவை சிதறுண்ட குடும்பங்களின் உடைந்துபோன மனங்களின் வழியே தமது சொற்களை உருவாக்கிக் கொள்கின்றன.
புருனோ துவங்கி அஷ்ரப் வரை இந்தக் கதைகளில் வரும் மனிதர்களை தமிழ் சிறுகதையுலகம் முன் கண்டறிந்ததேயில்லை. தனித்துவமிக்க கதைமொழி நுட்பமான கதையாடல் வாழ்வின் பேருண்மைகளைச் சுட்டிக்காட்டிச் செல்லும் உரையாடல்கள் என்று இக்கதைகள் சமகால தமிழ் சிறுகதை உலகிற்குப் புதிய திசையை அறிமுகம் செய்து வைக்கின்றன