பாரதியார் கட்டுரைகள் (பூம்புகார்)

பாரதியார் கட்டுரைகள் (பூம்புகார்)
.
"இந்தப் புது உலகச் சிற்பி நவயுகக்கலைஞன் வள்ளு வனுக்கும் சீதாசாரியனுக்கும் கூட்டு மேதா விலாசத்தில் தெள்ளிய வாரிசாகவும் புது ஜனநாயகத்தின் ஒப்பற்ற குழந்தை யாகவும் சுடர் விடுகிறான். ஷெல்லி வால்ட விட்மன், மாயக் காவ்ஸ்கி தாகர். இக்பால் ஆகிய கவிப் பேரரசர்கள் தரத்தில் மாற்றுக் குறையாமல் வரிசை தப்பாமல், அணிவகுத்து நிற்கிறான். அவர்களைப் போல் பாரதியும் காலத்திலும் வாழ்ந்தான்: சாலத்தைத் a, mu*b வாழ்கிறான்.
உள்ளத்தின் உண்மை ஒளியால் வாக்கினில் ஒளி உண்டாக்கியவன் பாரதி நாடினான் இடையறாத முயற்சி முழுமையை நாடி தனது இரு கரங்களையும் விரித்துத் தாவித் தாவிச் செல்ல, உண்மையை நாடினான் இயற்கை வாழ்வு. சமுதாய வாழ்வு, மன வாழ்வு என்ற முக்கூறுகொண்ட வாழ்க்கை நூலை பாரதி தனக்கே உரிய முறையில் படித்தான் அதன் விளைவாக கலை இலக்கியத் தத்துவங்களை கோட்பாடுகளைத் - தனக்கு உகந்த முறையில் புதுமை செய்து கொண்டான்"