பயாஸ்கோப் (கிழக்கு - அசோகமித்திரன்)

Price:
240.00
To order this product by phone : 73 73 73 77 42
பயாஸ்கோப் (கிழக்கு - அசோகமித்திரன்)
அசோகமித்திரனின் நிஜமான எழுத்து என்பது, அவரது ஒரு சொற்றொடருக்கும் அடுத்ததற்கும் இடையில் உள்ள மௌன இடைவெளிதான். எனவே, மிகக் கவனமான வாசிப்பைக் கோரும் எழுத்தாளர் ஆகிறார். இத்தனைக்கும், எந்த ஒரு பள்ளிப் பிள்ளையும் புரிந்துகொள்ளக் கூடிய விலைமதிப்பற்ற எளிமைதான் அவரது அடையாளமாக இருக்கிறது. கலைத்துறையைப் பற்றிய அசோகமித்திரனின் இந்தக்கட்டுரைகளும் மிக எளிமையாக எழுதப்பட்ட மிக நுணுக்கமான கட்டுரைகளே. ஜெமினி ஸ்டூடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் சிலகாலம் பணியாற்றியிருக்கும் அசோகமித்திரன், ஒரு பார்வையாளராகத் தம் கண்களில் பட்டவற்றை அக்கறைமிக்க விமரி சகராகவும், சமூகப் பரிவுள்ள எழுத்தாளராகவும் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். நாடகம் போன்ற வேறு சில நுண்கலைகள் பற்றிய அசோகமித்திரனின் கட்டுரைகளும் இந்நூலுக்கு சிறப்பு சேர்க்கின்றன.