பலூட்டா அறுவடையில் பங்கு
பலூட்டா அறுவடையில் பங்கு
ஆடு மேய்க்கின்ற ஒரு சிறுவன் தனது தொப்பியைத் தொலைத்து விட்டான் அது வெறும் தொப்பிதான் என்றாலும் அவனுக்கு அது பெரிய இழப்பாக இருந்தது உண்ணும்போதும் குடிக்கும்போதும் அதன்நினைவு அடிக்கடி வந்து வருந்தினான்.ஒரு நாள் வழக்கம் போல் காட்டுக்குள் ஆடுகளை மேய்ப்பதற்காகச் சென்றான்.அப்பொழுது பொழுதை இன்பமாகக் களித்திருக்க வேண்டிஒரு இளம் தம்பதிகள் அங்கே வந்திருந்தனர்.அவர்கள் பேசுவதை ஒளிந்திருந்து ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான் ஆடு மேய்க்கும் சிறுவன் அப்போது 'கண்ணே உன் கண்களில் நான் நிலவைப் பார்க்கிறேன் சூரியனைப் பார்க்கிறேன் பல வண்ண மலர்களைப் பார்க்கிறேன் அந்தக் கடலைப் பார்க்கிறேன் மறைகின்ற அந்தியைப் பார்க்கிறேன் மேலும் இந்த வனம் முழுவதையும் பார்க்கிறேன்' என்கிறான் அந்த இளம் வாலிபன் அதற்கு மேல் பொறுத்திருக்க முடியாத அந்தச் சிறுவன் 'அப்படியென்றால் தொலைந்து போன என் தொப்பியைக் கண்டுபிடித்துத் தாருங்கள்' என்றான் இந்தக் கதையில் வரும் 'என்னை' நீஉன் வாழ்வில் சந்திப்பாய் என்று சொல்ல முடியாது; கண்ணாடியில் பிரதிபலிக்கும் ஒரு மனிதனின் பிம்பம் அவனது வாழ்க்கையை முழுமையாக அறிந்திடாது. உதாரணத்திற்கு இதை எடுத்துக் கொள் என் உண்மையான பெயர் தக்டு 'பெயரில் என்ன இருக்கிறது? என்றார் ஷேக்ஸ்பியர். ஆனால் நீயே சொல் இந்தப் பெயர் ஏன் என்னைப் பல வகையிலும் துன்புருத்த வேண்டும்? மண்ணாங்கட்டியை உணர்த்துகிறது இந்தப் பெயர் நமது பட்டப் பெயர்களைப் பார் குப்பையைக் குறிக்கும் கச்ரியா கல்லைக் தொன்டியா என்றெல்லாம் இருக்கிறது ஒருவேளை யாராவது தன் குழந்தைக்கு கௌதம் என்று பெயர் வைக்கிறார்கள் என்றால் அதைச் சுருக்கி கௌதியா என்கிறார்கள் மனுதர்மம் சூத்திரர்களுக்கென்றே தனியாக ஒரு பெயர் பட்டியலை வைத்திருக்கிறது .ஏனென்றால் சமூக அவலங்களை நமது பெயர்கள் பிரதிபலிக்க வேண்டி அது விரும்புகிறது. பிராமணர்களின் பெயர்கள் தலைமைப் பண்பைக் குறிக்கிறது உதாரணமாக 'வித்யாதர்' சத்ரியர்களின் பெயர்கள் வீரத்தைக் குறிக்கிறது உதாரணமாக 'பலராம்' வைஷ்யர்களின் பெயர்கள் வளங்களைக் குறிக்கிறது உதாரணமாக 'இலட்சுமிகாந்த்' சூத்திரர்களாகிய நமக்கு?சூத்ரக் மாதங் என்று தாழ்ந்த சாதியினர் என்பதைக் குறிக்கும் பெயர்கள் .பல நூற்றாண்டுகளாய் இதுதான் நிலை.
பலூட்டா அறுவடையில் பங்கு - Product Reviews
No reviews available