அவசியம்தானா ஆறாம் விரல்?
அவசியம்தானா ஆறாம் விரல்?
புகையிலையின் வரலாறு, புகைத்தல் என்றால் என்ன, புகைப்பழக்கத்தின் வரலாறு, புகையிலை மற்றும் பீடி வர்த்தகம் குறித்த புள்ளிவிவரங்கள், புகைப்பதால் ஏற்படும் நோய்கள், குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்கள், புகைப்பழக்கத்தை விட்டொழிப்பதற்கான ஆலோசனைகள், புகைப்பதை விட்டொழிப்பதால் கிடைக்கும் நன்மைகள்... என புகைப்பழக்கம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் தெளிவாக விளக்குகிறது இந்த நூல். சுமார் நாற்பது ஆண்டுகளாகப் புகைத்து வந்த நூலாசிரியரின் சொந்த அனுபவங்களும், கதைகளும் இதில் உண்டு. சிகரட்டை விட்டொழித்த இவருடைய கட்டுரைகளால் உந்தப்பட்டு தாமும் புகைப்பழக்கத்தை விட்டொழித்தவர்கள் பலர். புகைப்பழக்கம் உள்ளவர்கள், விட்டொழிக்க முயற்சி செய்து தோல்வி கண்டவர்கள், விட்டொழிக்க முடியாமல் தவிக்கிறவர்கள், வீட்டில் புகைப்பவர்களைத் திருத்த முயற்சி செய்பவர்கள் என பலருக்கும் பயனுள்ள நூல் இது.
ஷாஜஹான் (பி. 1956) புதியவன் என்ற பெயரில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதி வருகிறார். தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பத்தாண்டுகள் பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார். கவியரங்குகள், கருத்தரங்குகள், கட்டிமன்றங்கள் போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். நாடகங்களில் நடித்தவர். வானொலியில் நிகழ்சிகளை வழங்கியிருக்கிறார். சில காலம் பத்திரிகைகளுக்கு தில்லி நிருபராகவும் பணியாற்றியுள்ளார். ஷிவ் கேரா எழுதிய Living with Honour என்ற நூலை மேக்மில்லன் பதிப்பகத்துக்காக 'வாழ்வாங்கு வாழ்தல்' என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள பல நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். சக்கரக்காலன் அல்லது பயனக் காதலன், இது மடத்துக்குளத்து மீனு..., மார்பகப் புற்றுநோய்: அறிந்ததும் அறியாததும், பாவம் இவனொரு பூனைகுட்டிக்காரன் ஆகிய நூல்கள் எழுதியுள்ளார். அரசியல், வரலாறு, மொழி, சமூகம் முதலான விஷயங்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார். பேஸ்புக் நண்பர்கள் மூலம் நிதி திரட்டி வசதியற்ற மாணவர்களின் கல்விக்கு நிதியுதவி செய்கிறார்.
அவசியம்தானா ஆறாம் விரல்? - Product Reviews
No reviews available