அதிர்ந்தது பூமி

அதிர்ந்தது பூமி
அரசியல், சமூக நிகழ்வுகள் மற்றும் இயற்கைச் சீற்றங்கள் என தமிழகத்றை உலுக்கிய சம்பவங்கள் ஏராளம். மூத்த தலைமுறையிடம் வாய்வழித் தகவலாகக் கேட்டு நாம் ஆச்சரியப்படுகிற. அதிர்ந்துபோகிற சம்பவங்களை நேரடியாகக் கண்ட சாட்சியங்கள் இன்றும் நம்மிடையே இருக்கின்றனர். அந்தச் சம்பவங்கள் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட சாட்சியங்களின் உணர்வுபூர்வமான தொகுப்பே இந்த 'அதிர்ந்தது பூமி'.
கடந்த கால கல்வெட்டுச் சம்பவங்களையும், அதில் தொடர்புடைய சாட்சியங்களையும் கைகோர்க்கவைத்து வரிக்கு வரி உண்மையோடு, வலுவான ஆதாரங்களோடு 'அதிர்ந்தது பூமியில் பதிவு செய்திருக்கிறார் பத்திரிகையாளர் எம்.பி. உதயசூரியன். வாசிக்க வாசிக்க ஒவ்வொரு சம்பவத்தையும் கண்முன்னே காட்சியாக விரிய வைக்கிறது இவரது உயிரோட்டமான எழுத்து நடை தமிழக வரலாற்றில் இடம்பிடித்த மறக்க முடியாத நிகழ்வுகளை, அதன் நேரடிதாக்கத்தோடு இன்றைய இளைய தலைமுறை அறிந்துகொள்ள இந்த நூல் உதவும்,