இந்திய நாகரிகம்

இந்திய நாகரிகம்
இந்திய நாகரிகம் என்பது ஒரு சிந்தனை, ஒரு யதார்த்தம், ஒரு புதிர்.
இந்தியாவின் 5,000 ஆண்டு வரலாற்றின் வழியே பயணம் செய்யும்
உணர்வை ஏற்படுத்தும் நூல் இது.
நூலாசிரியர் நமித் அரோரா, ஆறு முக்கிய இடங்களுக்குச் சென்று
நம்முடைய தொன்மையான வரலாற்றைக் கள ஆய்வு
செய்திருக்கிறார். தோலாவிராவில் உள்ள ஹரப்ப நாகரிக நகரம்,
இக்ஷ்வாகு வம்சத்தவரின் தலைநகரமான நாகார்ஜூனகொண்டா,
பௌத்தர்களின் கல்வி மையமான நாளந்தா, புரியாத புதிரான
கஜுராஹோ, ஹம்பியின் விஜயநகரம், இறுதியாக வாரணாசி,
மெகஸ்தனிஸ், பாஹியான், யுவான் சுவாங், அல்பெரூனி,
மார்க்கோ போலோ போன்ற புகழ்பெற்ற பயணிகளின் சுவையான
கதைகளையும் பொருத்தமான இடங்களில் அறிமுகப்
படுத்துகிறார்.
தெளிவான, நேர்த்தியான நடையில், நம்முடைய முன்னோர்களின்
சிந்தனைகள், நம்பிக்கைகள், விழுமியங்கள் எவ்வாறு பல ஆயிரம்
ஆண்டுகளாக இந்தியாவை நெறிப்படுத்துகின்றன, எஞ்சியவை எப்படி
காலவெள்ளத்தில் காணாமல் போய்விட்டன என்று காட்டுகிறார்.
நம்முடைய ரத்த நாளங்களில் கலந்துவிட்ட வரலாற்றின் மீது ஒளியைப்
பாய்ச்சுகிறது இந்நூல்.