அண்டார்டிகா வரலாறு
அண்டார்டிகா வரலாறு
அண்டார்டிகா ஒரு குளிர்ப் பிரதேசம் மட்டுமல்ல, ஒரு புதிர்ப் பிரதேசமும்கூட. பென்குயின்களும் ஸீல்களும் வசிக்கின்றன. ஆராய்ச்சியாளர்கள் ஏதோதோ ஆராய்ச்சிகள் செய்கிறார்கள் போன்ற அடிப்படைப் புரிதல்களைத் தாண்டி அண்டார்டிகா பற்றி பொதுவாக அதிகம் தெரியாது. முழுக்க முழுக்கப் பனியால் ஆன மாபொரும் நிலப்பரப்பு. பனி என்றால் கொட்டும் பனி அல்ல; கிச்சுகிச்சு மூட்டி கொஞ்சி விளையாடும் பனி அல்ல; உயிரை உறைய வைக்கும் கொடும்பனி!
அண்டார்டிக்காவின் சரித்திரப் பின்னணி திகிலானது. இதுவரை நமக்கு அறிமுகமான அத்தனை தேசங்களின் சரித்திரத்தையும் அநாயசமாக விஞ்கிவிடக்கூடியது அண்டார்டிகாவின் சரித்திரம். படர்ந்திருக்கும் பனி வெள்ளையாக இருந்தாலும், இந்தப் பிரதேசம் சொல்லும் பல கதைகள் ரத்தச் சிவப்பானவை.
எந்தக் கணமும் மரணம். எல்லா கணமும் மரணம். அண்டார்டிகாவில் கால் பதிக்க வேண்டும் என்னும் கனவுடன் சென்ற அத்தனை பேரையும் இரக்கமில்லாமல் சுழற்றி அடித்திருக்கிறது இக்கண்டம்.
மயிர்க்கூச்செரியச் செய்யும் பயணங்கள். நெஞ்சு நடுக்க வைக்கும் சம்பவங்கள். கண்காணாத தொலைவில் வெளேரென்று பரந்துகிடக்கும் அண்டார்டிகா குறித்த அத்தனை விவரங்களையும் ஆதாரபூர்வமாகத் தரும் நூல் இது.
அண்டார்டிகா வரலாறு - Product Reviews
No reviews available