அனிதா - இளம் மனைவி

அனிதா - இளம் மனைவி
.குமுதம் இதழில் நான் எழுதிய முதல் தொடர்கதை 'நைலான் கயிறு' .'அனிதா- இளம் மனைவி' இரண்டாவது. குமுதம் எடிட்டோரியல் .அதை 'அனிதா - இளம் மனைவி' என்று மாற்றினார்கள். இதனால் இக்கதையின் மேல் ஆர்வம் கூடுகிறது என்று எண்ணியிரக்கலாம்.அப்போது வெளிவந்த 'காயத்ரி' என்னும் குறுநாவலை திரு.பஞ்சு அருணாச்சலம் திரைப்படமாக எடுக்க அனுமதி கேட்டிருந்தார். ' அனிதா - இளம் மனைவி ' கதையையும் படித்துவிட்டு இதையும் சினிமா எடுக்கலாம் என்றார்.பஞ்சு அருணாசலம் நிறைய சென்டிமென்ட் பார்ப்பவர்.'அனிதாவை திரைப்படமாக்குகையில் அன் பெயரை 'இது எப்படி இருக்கு' என்று மாற்றினார். படம் ஓடவில்லைஃஅது எடுக்கப் பட்ட விதத்தில் எந்தப் பெயரிலும் ஓடியிருக்காது. அடுத்து 'ப்ரியா' எடுத்தார். அன் திரை வடிவிலும் எனக்குத் திருப்தியில்லை. இருந்நுதம் சிங்கப்பூர்,டால்பின் ஷோ, இளையராஜாவின் இன்றும் இனிக்கும் பாடல்களுக்காக அது வெற்றி பெற்றது. பின்னர் பஞ்சு அருணாசலம் என் நாவல்களைப் படமாக எடுப்பதை விட்டுவிட்டார்