ஏக் தோ டீன்

0 reviews  

Author: கவுதம்தாஸ்

Category: தன்னம்பிக்கை

Available - Shipped in 5-6 business days

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஏக் தோ டீன்

இந்த நூல் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய மதிப்புரையிலிருந்து... இக்காலச் சமுதாயம் அதிவேகமாக மாறிவருகிறது. மாறிவரும் சமூகம் பல சிக்கல்களைச் சந்திக்கிறது. அந்தச் சிக்கல்களுக்கு அடிப்படையான முதல் காரணம் பொருளியல். இரண்டாம் காரணம் உளவியல். பொருளியலைப் பற்றியே அதிகமாகச் சிந்திக்கும் நம் சமூகம் உளவியலைச் சிந்திப்பதில்லை. பணமும் பணம் சார்ந்த பிரச்னைகளை விட, மனமும் மனம் சார்ந்த பிரச்னைகள் பெருகி வருகின்றன. அந்த உளவியல் பிரச்னைகளுக்கு மாமருந்து இந்நூல். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பாதிப்பை ஏற்படுத்தும் பதின்பருவப் பிரச்னைகளைப் பற்றி இந்நூல் அதிகம் விவாதிக்கிறது. பதின்பருவத்தில் பிள்ளைகளை வளர்ப்பதுதான் வாழ்வில் கடுமையான செயலாக இருக்கிறது என்று குறிப்பிடுகிறது.மாறிவரும் கல்வி - உணவுப் பழக்கவழக்கங்கள் - கலாசார வித்தியாசங்கள் - நாகரிக மாற்றம்... இவைதாம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவில் பெரும்பள்ளத்தை ஏற்படுத்துகின்றன. அந்தப் பள்ளத்தை இந்த நூல் அதிகமாகவே ஆராய்ந்திருக்கிறது. இந்நூலின் ஆசிரியர் டாக்டர் கௌதம்தாஸ் பிரச்னைகளைச் சொல்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் தீர்வும் சொல்கிறார். பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பது மாதிரி இந்த நூலின் வழி நிறைய வழிகாட்டுதல்களைப் பெற்றோருக்குச் சொல்லிக் கொடுக்கிறார்... ‘தண்டிப்பதே ஒழுக்கம் என்பது பல பெற்றோருடைய எண்ணம். உண்மையில் ஒழுக்கம் என்பது ஒருவிதப் பயிற்சி. சமூகம் ஏற்றுக்கொண்ட வழிகளில் நடந்துகொள்ள வாழப் பழக்கும் ஒருவிதப் பயிற்சிதான் ஒழுக்கம். இதைப் பெற்றோர்தான் பிள்ளைகளுக்கு முதலில் புகட்ட வேண்டும். ஒழுக்கம் என்பது ஒரு வாழ்க்கைமுறையாகக் கடைபிடிக்கப்பட்டால்தான் அந்தப் பிள்ளைகள் உயர்ந்த சுயமதிப்பிடு உள்ளவர்களாக வளர்வார்கள்’ என்று டாக்டர் கௌதம்தாஸ் குறிப்பிடும்போது எத்துணை ஆழ்ந்த உண்மை இது என்பது புலனாகிறது. ‘குழந்தைகளைக் குழந்தைகளாகவே பார்க்காமல், அவர்களை உங்களுக்குச் சமமான தனிமனிதர்களாகப் பாருங்கள். அரசியல் தொடங்கி விலைவாசி வரை எல்லாமும் பேசுங்கள். அவர்களது அபிப்ராயங்களை அலட்சியம் செய்யாதீர்கள்’ என்கிறார். இது முழுக்க முழுக்க உண்மை. பிள்ளைகளோடு பெற்றோர் அந்நியப்படக்கூடாது. உரையாடலே நல்ல உறவாடல் என்ற கருத்தை முன்வைக்கிறார். இப்படி இந்தப் புத்தகத்தின் பக்கங்களிலெல்லாம் வாழ்வியல் முத்துகள் கொட்டிக் கிடக்கின்றன. பெற்றோர் தெரிந்துகொள்ளவும் பிள்ளைகள் புரிந்துகொள்ளவும் ஏராளமான செய்திகளை எளிய தமிழில் தந்திருக்கும் டாக்டர் கௌதம்தாஸ் நம் பாராட்டுக்குரியவர். இது வெறும் உளவியல் நூல் மட்டும் அல்ல... அற்புதமான வாழ்வியல் நூல். பிள்ளைகள் கையேடு மாதிரி இது ஒரு பெற்றோர் கையேடு. மாறிவரும் சமுகத்துக்கு டாக்டர் கௌதம்தாஸ் செய்துள்ள தொண்டாக இந்த நூலைக் கருதுகிறேன்.

ஏக் தோ டீன் - Product Reviews


No reviews available