அர்த்தமுள்ள அந்தரங்கம்

அர்த்தமுள்ள அந்தரங்கம்
உயிரினங்களில் தனித்துவமுடையதாக, மற்ற எல்லா உயிரினங்களுக்கும் தலைமை தாங்கக்கூடிய ஆற்றலும் அறிவும் பெற்றதாக இருப்பதுதான் மனித இனத்தின் சிறப்பு.
இந்த ஆற்றலையும் அறிவையும் மனிதனுக்கு அவன் நினைத்த மாத்திரத்திலேயே இயற்கை வழங்கிவிடவில்லை. DNA என்ற புரதச் சுருளில் தோன்றிய உயிரின் தொடக்கம், மனிதன் என்ற உன்னத நிலை வரை பரிணாம வளர்ச்சி அடைத்திருக்கிறது. அப்படிப்பட்ட உயிரைத் தாங்கி இருக்கும் உயிரினங்களின் தலையாண பணியே இனப்பெருக்கம்தான். இனப்பெருக்கத்தை ஊக்குவிப்பதையே குறியாகக் கொண்டு செயல்படுபவை ஜீன்கள்.
ஜீன்கள் தன் உயிர் தேவைக்கு ஏற்றவாறு உயிரினங்களில் ஏற்படுத்திய பரிணாம மாற்றங்கள் பல. படர்வன பறப்பன ஊர்வன பாலூட்டிகள் போன்றவை இவற்றில் அடங்கும் பாலூட்டிகளின் முதிர்ந்த பரிணாமம்தான் மனித இனம். இந்தப் பரிணாமங்களுக்கும், உயிரினங்களின் வாழ்வியல் மாற்றங்களுக்கும், உயிரினங்களின் வாழ்வியல் மாற்றங்களுக்கும் அடிப்படையாக ஜீன்கள் கையில் எடுத்திருக்கும் யுக்திதான் காமம்.
பன்னிரெண்டு வகையான மனித காமத்தையும் அதனால் மனித இனத்தில் ஏற்பட்ட வாழ்வியல் ஏற்ற இறக்கங்களையும் 'அர்த்தமுள்ள அந்தரங்கம்' என்ற இந்தப் புத்தகத்தில் விரிவாக விளக்கி இருக்கிறார் டாக்டர் ஷாலினி