9/11 : சூழ்ச்சி - வீழ்ச்சி- மீட்சி
.செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டடங்கள் மீதும், ராணுவத் தலைமையகமான பெண்டகன் மீதும் அல் பாயிதா தீவிரவாதிகள் விமானத் தாக்குதல் நடத்தினார்கள். இருபத்தியோராம் நூற்றாண்டில் உலகம் எத்தனை அதிநவீன தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதை மிகத் துல்லியமாக எடுத்துக்காட்டிய சம்பவம்அது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் யார் யார்? எப்படி இத்தனை பெரிய தாக்குதலைத் திட்டமிட்டார்கள்? எத்தனை மில்லியன் டாலர்கள் இதற்குச் செலவழித்தார்கள்? குறி பிசகாமல் அடிக்க என்னென்ன பயிற்சிகள் மேற்கொண்டார்கள்? கிட்டதட்ட ஒரு வருட காலத்துக்கும் மேலாக அமெரிக்காவிலேயே மையம் கொண்டு, அமெரிக்க உளவுத்துறையின் கழுகுக் கண்களை எப்படி ஏமாற்றினார்கள்? தமிழில் முதல்முறையால் இத்தனை விவரங்களும் ஆதார பூர்வமாக வெளியாகிறது. அல் காயிதாவின் உலகளாவிய நெட் ஒர்க், அமெரிக்க உளவுத்துறை, பாதுகாப்புத்துறை, குடியேற்றம் மற்றும் குடியுரிமை வழங்கும் துறைகளின் பிரச்சனைகள், அதிகார வர்க்கத்தில் உள்ள அகங்காரப் பிரச்சனைகள் எனப் பல அம்சங்களை மிக விரிவாக அலசி ஆராயும் செப்டம்பர் 11 விசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் எழுதப் பட்ட நூல் இது.