1989 : அரசியல் சமுதாய நிகழ்வுகள்

1989 : அரசியல் சமுதாய நிகழ்வுகள்
து.மூர்த்தி அவர்கள் எழுதியது. எங்கெல்லாம் ஜனநாயகம் மறுக்கப்படுகிறதோ, எங்கெல்லாம் மக்களின் அடிப்படை வாழ்வுரிமைகள், அவற்றைக் காப்பாற்ற வேண்டிய கவனமாக நடைமுறைப்படுத்த வேண்டிய அரசுகளாலேயே பறிக்கப்படுகின்றனவோ, எங்கெல்லாம் பொருளியல் சுரண்டல்கள் அரசமைப்புகளின் பாதுகாப்போடு வாழ்க்கைச் சட்டங்கள் ஆகின்றனவோ, எங்கெல்லாம் வணிகப் போட்டிகள் ஆதிக்கப் போட்டிகளாக மாறி இராணுவத்தால் தீர்க்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் வன்முறைகள் வெடிக்கின்றன. இந்த வன்முறைகள் 'பழிக்குப் பழி' என்ற கண்ணோட்டத்தில் தனிநபர்களாலும் மேற்கொள்ளப்படுகின்றன. தங்கள் குழுக்களுக்கு மட்டுமே இழைக்கப்பட்ட அநீதியாகக் கருதப்பட்டு, தங்கள் குழு நிலையில் மட்டுமே நியாயம் தேடி மேற்கொள்ளப்படுகின்றன.இவை தத்துவத்தின் வழிகாட்டுதல் இன்றி , வெகுமக்களின் ஆதரவைத் தேடாமலும் ஆதரவின்றியும் மேற்கொள்ளப்படும்போது அவை தனிநபர் பயங்கரவாதமாக மாறுகின்றன.