தொல்லியல் ஆய்வுகள் (அகழாய்வு, கல்வெட்டு, நாணயம் பற்றியவை)

Author: பேராசிரியர் டாக்டர் கே.வி.இராமன்
Category: கல்வெட்டுக்கள் தொல்லியல் துறை
Out of Stock - Not Available
தொல்லியல் ஆய்வுகள் (அகழாய்வு, கல்வெட்டு, நாணயம் பற்றியவை)
இந்தியத் தொல்பொருள் துறையின் தென்மண்டலப் பிரிவுக் கண்காணிப்பாளராய் டாக்டர் கே.வி.இராமன் பல ஆண்டுகள் பணியாற்றினார். புதையுண்ட நகரங்களான நாகார்ஜுன கொண்டா, கொடுங்கல்லூர், பூம்புகார், காஞ்சி, மதுரை, குன்றத்தூர் முதலான இடங்களில் அகழ்வாய்வு செய்து அரிய செய்திகளைக் கண்டறிந்துள்ளார். பூம்புகாரில் இவரது நேரடிப் பார்வையில் நடைப்பெற்ற அகழ்வாய்வுகளும் கண்டுபிடிப்புகளும் அறிஞர்களால் பாராட்டப்பெற்றன. மேலும் UNESCO நிறுவனத்தினர் இவருக்கு விருதும் கேடயமும் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலைப் பற்றி இவர் எழுதிய ஆராய்ச்சி நூலுக்காக, சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இவரது ’பாண்டியர் வரலாறு’ என்ற நூலினைத் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2011-இல் தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை அவருக்கு ‘தனிச்சிறப்புமிக்க புகழ்மிகு தொல்லியலாளர்’ என்னும் வெகுமதி பட்டத்தினை வழங்கி கெளரவித்தது.