குஜராத் 2002 கலவரம்
குஜராத் 2002 கலவரம்
இன்றுவரை குஜராத் வன்முறைகளின் வடு பல முஸ்லிம்களின் உடலிலும் மனத்திலும் ஆறாமல் வதைத்துக்கொண்டிருக்கிறது. சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ அவர்கள் நிர்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள்.
சமகால சரித்திரத்தின் கறுப்பு அத்தியாயம் 2002. முஸ்லிம்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். பெண்கள் கூட்டாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். குழந்தைகளும்கூட கொடூரமாகக் கொல்லப்பட்டனர். வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டு, உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கலவரம் நெடுகிலும் இந்துக்களின் கையே ஓங்கியிருந்தது. அவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் குஜராத் அரசின் ஆதரவும் பாதுகாப்பும் இருந்-தது.
அதனால்தான் கலவரத்துக்குக் காரணமானவர்கள் அதைப் பற்றிப் பெருமிதம் பொங்கப் பேசித் திரிகின்றனர். அவர்கள் எதற்கும் எப்போதும் யாரிடமும் எந்த மன்னிப்பையும் கோரவில்லை. தனிப்பட்ட முறையில்கூட அவர்களுக்கு எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லை. கலவரத்தைவிடக் கொடூரமானது அதனை நியாயப்படுத்தும் இந்த மனநிலை.
நாம் வாழுங்காலத்தில் இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான மதக்கலவரம் குஜராத் 2002. இதைப் பற்றி பேசாமல் கடந்துபோவதன்மூலம் கிட்டத்தட்ட நாமும் அக்கலவரங்களில் பங்குகொள்கிறோம்.
குஜராத் 2002 கலவரம் - Product Reviews
No reviews available