ஜமீன்களின் கதை

Price:
500.00
To order this product by phone : 73 73 73 77 42
ஜமீன்களின் கதை
நிலம் சகி... நிலம் ரட்சகி... நிலம் ராட்சஷி!
இது கதையல்ல. போலவே கட்டுரையும்.
இரண்டும் கலந்த நடையில் எழுதப்பட்ட இத்தொடர், ‘தினகரன்’ நாளிதழுடன் ஞாயிறுதோறும் வெளிவரும் ‘வசந்தம்’ இணைப்பிதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடம் அமோக வரவேற்பைப்பெற்றது. முதல் 13 அத்தியாயங்கள் நிலம் குறித்தே பேசப்பட்டிருக்கிறது.
எதுவும் கற்பனையில்லை. மிகைப்படுத்தலும். ஆதாரங்கள் அடிப்படையிலேயே எழுதப்பட்டு இப்பொழுது புத்தக வடிவில் வெளிவருகிறது.
தமிழகத்திலுள்ள அனைத்து ஜமீன்களின் வரலாறும் இதில் பதிவாகி இருக்கிறது என்று சொல்ல முடியாது. அதேநேரம், முக்கியமான ஜமீன்கள் எதுவும் விடுபட்டு விடவில்லை என உறுதியாகச் சொல்லலாம்..