யுரேகா கோர்ட்
யுரேகா கோர்ட்
‘‘டேய் ஆகாஷ், அதோ தெரு முனையில ஒரு கார் நிக்குது இல்ல... அதை யார் முதலில் தொடுறாங்கன்னு பார்ப்போமா?’’ என்று ப்ரவீனிடம் கேட்டதும், அவனும் ‘சரி’ என்று சொல்லி, ஒன்.. டூ... த்ரீ... என்று சொல்லி ஓடினார்கள். இரண்டு பேருமே ஓரிரு நொடிகள் வித்தியாசத்தில் காரைத் தொட்டுவிட்டார்கள். நான்தான் முதலில் தொட்டேன்... இல்லை நான்தான் முதலில் தொட்டேன் என்று ஒரே சண்டை. ப்ரவீன் சொன்னான், ‘‘வா.. அங்கிள்கிட்டே சொல்லுவோம்; அவர் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்’’ ஆகாஷும் சரி என்றான். காரை யார் தொட்டார்கள் என்பதற்கே இவ்வளவு பெரிய சண்டை என்றால் உலகத்தையே மாற்றிப்போட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளின் போது எப்படியெல்லாம் சண்டை நடந்திருக்கும். வெவ்வேறு காலகட்டங்கள், வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு ஆராய்ச்சி முயற்சிகள்னு பல கட்டங்களுக்குப் பிறகுதான் நமக்குத் தேவையான ஒரு கண்டுபிடிப்பு உருவாகுது. சமயத்தில், ஒரே பொருளை ‘நான்தான் கண்டுபிடிச்சேன்’னு ஒருத்தர் மல்லுக்கட்டுவார். ‘இல்லை, இது என்னோட கண்டுபிடிப்பு’னு மார் தட்டுவார் இன்னொருத்தர். ஆனால், இதைத் தாண்டி ‘இதை இவர்தான் கண்டுபிடித்தார்’னு எப்படி நிரூபணம் ஆச்சு? இந்த நிஜமான சண்டைகளைப் பற்றி தெரிந்துகொள்ள உங்களுக்கும் ஆசைதானே... அதைத்தான் ஓர் அழகான கற்பனையா உருவாக்கியிருக்கோம். ‘யுரேகா கோர்ட்’னு ஒரு கற்பனையான நீதிமன்றத்தை உருவாக்கி, அதில் ரெண்டு தரப்பு விவாதங்களையும் அலசி ஆராய்ந்து, துவைச்சுத் தொங்கப்போட்டிருக்கோம். ஆமாம். இந்த யுரேகா யாருன்னு கேட்கிறீங்களா... ‘யுரேகா கோர்ட்’னு எதுக்குப் பேர் வெச்சிருக்கோம்னு ஆர்க்கிமிடிஸைத் தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் கண்டிப்பா தெரியும். ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’னு சொல்லாம, கைதட்டி உற்சாகமா வரவேற்றாங்க சுட்டிகள். சுட்டி விகடன் வெளியானபோதும் ‘யுரேகா கோர்ட்’டை நான்தான் முதலில் படிப்பேன், இல்லை இல்லை நான்தான் முதலில் படிப்பேன் என்று பல சுட்டிகளின் வீடுகளில் யுரேகா கோர்ட் வைக்கும் அளவுக்கு சண்டையே நடக்கும். இந்த சூப்பரான தொடர் மூலம், அறிவியல் விஷயங்களை சுவையாகத் தரமுடியும் என்று நிரூபித்திருக்கிறார் , சிறந்த சிறுவர் எழுத்தாளருக்கான ‘பால சாகித்ய அகாதமி விருது’ பெற்ற எழுத்தாளர், ஆயிஷா இரா.நடராசன். அவருடைய இந்தப் புதுமையான உத்தி, சுட்டிகளுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காகத்தான் இந்த ‘யுரேகா கோர்ட்’. ஆர்டர்... ஆர்டர்... ஆர்டர்!
யுரேகா கோர்ட் - Product Reviews
No reviews available