யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் (3 பாகங்கள்)

0 reviews  

Author: யவனிகா ஸ்ரீராம்

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  610.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் (3 பாகங்கள்)

யவனிகா ஸ்ரீராம் கவிதைகளில் அமையும் சொற்கள் எல்லாம் தமிழ்ச் சொற்களே, சில தமிழாகிவிட்ட சொற்களும் உண்டு.
இவரது கவிதைகளில் வரும் பொருட்கள் யாவுமே தமிழ்நாட்டில் கிடைப்பதுதான். அப்பொருட்கள் யாவும் தமிழரிடையே புழங்கும் சொற்களைக் கொண்டே குறிப்பிடப்படுவனதாம்.
ஆனால் இச்சொற்களும் பொருட்களும் இவருடைய கவிதைகளில் அமையும்போது இதுவரை நாம் அறியாத அனுபவித்திராத பொருளையும் அழகையும் வாசனையையும் கொணர்ந்து தருகின்றன. இது தமிழுக்கு மிகவும் புதியது. தமிழ்க்கவிதை மரபில் தனித்துத் தெரியும் ஒரு சுயமான ஆக்கக்கூறு.
எல்லாக் கலையும் சாதகத்தால் ஒருவருக்கு மனம் கூடி அமையப் பெறுவது. யவனிகாவுக்கு அப்படி ஒரு சாதகத்தால் அமையப் பெற்றவை இக்கவிதைகள்.
இவை ஐந்திணைக்கப்பால் ஆறாவது திணையையும் ஆறாவது நிலத்தையும் ஆக்குகின்றன. அவ்வகையில் ஈராயிரமாண்டுத் தமிழ்க்கவிதை மரபில் இவை ஆறாம் புலனை நமக்கு ஆக்கித் தருகின்றன.

                                                                                                                                 - ரமேஷ் - பிரேம்

இந்தக் கவிதைகள் குறிப்பிடத்தக்கவையாக இருப்பதற்கு காரணம் புதுமையான வரிகள். ஒவ்வொரு வரியிலும், வார்த்தையிலும் நம்மை அதிசயங்களைக் காணப் பண்ணும் திறன் கொண்டவையாய் இருக்கின்றன. இந்த வரிகளை விடுத்து வேறுவிதமாய் இவற்றை எழுதியிருந்தால் நிச்சயம் இவை தோற்றுப்போன முயற்சியாகவே இருக்கும். உணர்வுப் பூர்வமான நேர்மை, மொழியாளுமை இவை இத்தகு கவிதைகளுக்கு ஆதாரப் புலமாக இருக்கின்றன. யவனிகா ஸ்ரீராமின் அரசியல் நிலைப்பாடு,என்பது ஆதார உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம், பாலியல் சுதந்திரம், மார்க்சியம், உலகமயச் சூழல் எதிர்ப்பு, சூழியல் சிந்தனை, தசையும் இரத்தமுமாய் இருக்கும் உடலையும் உணர்வுகளையும் கொண்டாடுதல், ஆன்மீகத்துக்கு மாற்றாக கலையை முன்னிறுத்துதல் ஆகியவற்றைச் சொல்லலாம்.


                                                                                                                        - பாலா கருப்பசாமி

 

முதலாளித்துவம் துவங்கிய காலகட்டத்தில் எந்திரங்கள் மனிதனை அவனது உற்பத்தியிலிருந்து அந்நியமாக்கினாலும் ஓரளவு தன்னிறைவுக்கும் வாழ்வாதாரத்துக்குமான வழிகளையாவது விட்டுவைத்திருந்தன. ஆனால் தாராளமயமாக்கலுக்குப் பிறகு மனிதர்கள் ஈடுபடுவதற்கு எந்திரங்கள் கூடப் பறிக்கப்பட்டு விட்டன. பூர்வ நிலங்களிலிருந்தும் பிடுங்கி எறியப்பட்ட மக்கள் உலக வரைபடத்தில் குறுக்கும் நெடுக்குமாகப் பயணிக்கும் காலம் இது. அந்த நிலைமைகளை கவிஞன் யவனிகா ஸ்ரீராமைப் போலத் தமிழில் கலையழகுடனும் தீர்க்க தரிசனத்துடனும் உரைத்த ஒரு மார்க்சியக் கவிஞன் யாருமில்லை.


                                                                                                               - ஷங்கர் ராமசுப்பிரமணியன்