வ.உ.சி (சுவாசம்)

வ.உ.சி (சுவாசம்)
வெற்றியும் தோல்வியும் துயரமும் கலந்த வ.உ.சி.யின் ஒப்பற்ற வாழ்க்கையை விவரிக்கும் நூல் இது.
பிரிட்டிஷ் ஆட்சியில் சுதேசிக் கப்பலை வ.உ.சி. வெற்றிகரமாக ஓட்டிக் காண்பித்தார். தொழிலாளர்களின் முதல் வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தினார். தேசத் துரோகம் செய்ததாக பிரிட்டிஷாரால் சிறை வைக்கப்பட்டார். இந்தியத் தேசத்துக்காக இப்படிப் பாடுபட்ட வ.உ.சி.யின் இறுதிக் காலம் எப்படி இருந்தது?
தனது செல்வத்தையெல்லாம் இழந்து வறுமையில் வாடிய வ.உ.சி., மளிகைக் கடையில் வேலை செய்தார். சுடுகாட்டுக்கு அருகில் குறைந்த வாடகைக்கு வீடெடுத்து வாழ்ந்தார். வ.உ.சி. இறப்பதற்கு 23 நாட்களுக்கு முன்பு தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் அவரே தன் துயர்மிகு வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார்.
இப்படி வ.உ.சி.யின் வாழ்க்கையில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும், வ.உ.சி. மீதான வழக்கு விவரங்களையும் எளிமையான தமிழில் எழுதி இருக்கிறார் ப.சரவணன்.