விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி

விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி
இந்த பூமி, மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. பல்வேறு ஜீவராசிகளுக்கும் சொந்தமானது. அதில் குறிப்பிடத்தக்கவை இயற்கை சமநிலையைப் பேணிகாக்கும் பூச்சிகள்.
மனிதன் இல்லை என்றாலும் இயற்கை வாழும். ஆனால், இயற்கை சமநிலை சிதைந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.
அமெரிக்காவில் அளவுக்கு அதிகாகத் தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளால் தேனீக்கள் இனமே அழிந்துவிட்டது. அதன் பலனை தற்போது உணரத் தொடங்கிய அமெரிக்கா, மிச்சம் மீதி இருக்கும் தேனீக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது
விவசாயத்தில் லாபம், நஷ்டத்தை தீர்மானிப்பது இடு பொருள், பூச்சிக்கொல்லிக்கான செலவுகள்.அதேபோல பூச்சிகளும் நோய்களும்தான் ஒரு பயிரின் மகசூலை தீர்மானிக்கன்றன.
பூச்சிகளில் தீமை செய்யும் பூச்சி, நன்மை செய்யும் பூச்சி என இரண்டு பிரிவுகள் இருப்பது பற்றியும், நன்மை செய்யும் பூச்சிகள் ஒவ்வொன்றைப் பற்றியும் ஆச்சர்யமான பல தகவல்கள் இந்தப் புத்தகத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
இது புத்தகமல்ல: பூச்சிக்கொல்லி செலவைக் குறைக்கும் சூத்திரம்.
- தூரன் நம்பி