விண்ணளவு சாதனை

விண்ணளவு சாதனை
தமிழில் நாகலட்சுமி சண்முகம்
"மந்த கதியில் சென்று கொண்டிருக்கும் உங்கள் வாழ்க்கைக்கு உடனடியாக உயிரூட்டி, அதை அதிவேகத்தில் இயங்க வைக்கக்கூடிய ஒரு புத்தகத்தை நீங்கள் தேடிக் கொண்டு இருக்கிறீர்களா? இனி நீங்கள் வேறு எங்கும் நேட வேண்டாம். நம்முள் ஒளிந்திருக்கும் அற்புதங்கள் பலவற்றை வெளிக்கொண்டு வருவது எப்படி என்பதை பிரையன் டிரேசியின் இப்புத்தகம் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும் ஹார்வி மெல்கே
பிரையன் டிரேசி தனது
25 வருட ஆராய்ச்சி மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் அமைந்துள்ள, ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டுள்ள ஒரு செயற்திட்டத்தை இப்புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். இதில் கூறப்பட்டுள்ளவற்றை உங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக நீங்கள் ஆக்கிக் கொள்ளும்போது உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி தாண்டவமாடும், ஆரோக்கியம் அரங்கேறும், உங்களுடைய சுயநம்பிக்கை விண்ணைத் தொடும்.
பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பங்கேற்றுள்ள இவரது பயிலரங்குகளில் இவர் கற்றுக் கொடுப்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதில் பங்கேற்றவர்கள் தங்கள் வருமானத்தைப் பல மடங்கு பெருக்கிக் கொண்டதோடு, தங்கள் வாழ்வின் மற்ற பிற அம்சங்களிலும் மிகச் சிறப்பான மேம்பாட்டை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்புத்தகத்தில் நீங்கள் கற்றுக் கொள்ளவிருக்கும் கோட்பாடுகன், கொள்கைகள் மற்றும் நடைமுறை கழத்திகள் உங்களுடைய வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாற்ற வல்லவை. இவற்றை நீங்கள் பின்பற்றும்போது, நீங்கள் கனவிலும் நினைத்துப் பார்த்திராத மாபெரும் வெற்றிக்கு அவை உங்களை இட்டுச் செல்லும், உங்களுடைய சுயமதிப்பை வானளாவ உயர்த்தும், உங்களது ஆற்றலைப் பல மடங்கு பெருக்கும். அதோடு, உங்களது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் நீங்கள் விண்ணளவு சாதனை படைப்பீர்கள்.
அமோகமாக விற்பளையாகிக் கொண்டிருக்கும் 55 நூல்களின் ஆசிரியர் பிரையன் டிரேசி. அவரது புத்தகங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் 1,000க்கும் மேற்பட்டப் பெருநிறுவனங்களுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அமெரிக்கா, கனடா மற்றும் 55க்கும் மேற்பட்ட இதர நாடுகளில் அவர் நிகழ்த்தியுள்ள 5.000க்கும் மேற்பட்டக் கருத்தரங்குகள் மற்றும் சொற்பொழிவுகள் வாயிலாக, அவர் 50 லட்சம் பேரைச் சென்றடைந்துள்ளார்.