வேத கால பாரதம்
வேத கால பாரதம்
நாகபுரியில் பிறந்த பானா சாஸ்திரி ஹரிதாஸ் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் இரண்டாம் தலைவர் குருஜி கோல்வால்கருக்கு நெருங்கியவர், அவருக்கு ஆசி வழங்குமாறு காஞ்சி மஹாஸ்வாமியிடம் கோல்வால்கர் வேண்டி மஹாஸ்வாமி அவருக்கு தீட்சை வழங்கினார். அதற்கு குரு தாக்ஷிணையாக அவர் வேதங்கள் படைத்த நாட்டைப்பற்றிய துளிகள் என்கிற தலைப்பில் மராத்திய மொழியில் தன் பி.ஹெச்.டி தீசிஸ் எழுதினார். பெரும்பாலும் வேத பாரம்பரிய கருத்துக்களை ஒட்டி இருந்த அந்த ஆய்வு சில அம்சங்களில் பாரம்பரியத்திலிருந்து மாறுபட்டு இருந்தாலும், காஞ்சி மஹாஸ்வாமி அந்த தீசிஸை அப்போது பிரபல புத்தகப் பதிப்பு அமைப்பாக இருந்த பி ஜி பால் கம்பெனி அதிபர் நீலகண்ட ஐயரை அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கச்சொல்லி, அது Glimpses of Vedic Nation என்கிற தலைப்பில் வெளிவந்தது. யதார்த்த தனிநபர், குடும்படி சமுதாய வாழ்க்கை தொடங்கி போர்முறை, ராஜதர்மம் ஆகிய வேதகால பாரத நாட்டு மூல்யங்களை நிகழ்கால பார்வையில் அளிக்கும் அந்தப் புத்தகம், இப்போது நாம் காணும் கலாச்சார சரிவிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள அவசியமான மாற்று கருத்துக்களைக் கொண்ட பொக்கிஷம். அரிய அந்தப் புத்தகத்தைத் தமிழில் ாொழிபெயர்த்து வழங்கும் அல்லயன்ஸ் பதிப்பகம் தமிழக ஆன்மிக தேசிய வளர்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றியிருக்கிறது. அனைவரும் படிக்கவேண்டிய இந்தப் புத்தகம் குறிப்பாக சமூக, அரசியல், மரபியல், மானுடவியல், சரித்திர ஆய்வாளர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களுக்கு இதுவரை அவர்களுக்குக் கிடைக்காமல் மறுக்கப்பட்ட பாரத பாரம்பரிய கருத்துக்களை ஒரே இடத்தில் தொகுத்து வழங்கியிருக்கிறது. இன்றைய நிலையில் மாற்று சிந்தனை தேவை என்று நினைக்கும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் இது.
வேத கால பாரதம் - Product Reviews
No reviews available