வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்

வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்
தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்காக வாசிப்பை நம்பி இருப்பவர்கள் அனைவரும் வளம் பெற இந்தப் புத்தகம் மிகவும் உதவும்.மாணவ, மாணவியரால் தங்கள் பாடங்களைத் தவிரப் பிற துறை அறிவையும் பெருமளவில் பெருக்கிக்கொள்ள முடியும்.இப்படிப் பலர் தங்கள் இயலாமையைத் தெரிவிப்பார்கள். இவர்கள் எல்லாருக்குமே பயன்படக் கூடிய விதத்தில் இங்கு பலவித உத்திகளைக் கொடுத்திருக்கிறோம். இவற்றைப் பயன்படுத்திப் பார்த்தால்....‘எனக்கெல்லாம் வேகமாகப் படிக்க வரவே வராது. மெதுவாகப் படித்தால்தான் எதுவுமே மனதில் ஏறும். விரட்டி விரட்டிச் சவாரி செய்ய மனம் ஒரு குதிரையா என்ன?’என் தொழிலுக்கு நான் அதிகம் படிக்க வேண்டியது அத்தியாவசியமான தேவையாக இருக்கிறது. ஆனால் என்னால் அதிகமாகப் படிப்பதற்கு முடியவில்லை. மற்றவர்களைப் போல் வெகு வேகமாக என்னால் படிக்க முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம்? என்று சிலர் நொந்து கொள்வார்கள்.இதற்கான வழிமுறைகள் எல்லாருக்குமே தெரிவது இல்லை. அது தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு அதைச் சொல்லிக் கொடுப்பதும் இல்லை. அந்தக் குறையைப் போக்குவதற்காகவே இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது.படிக்கப் படிக்கப் இவர்களுக்கு அதிகப் பலன் கிடைக்கும். எப்படிப் படிப்பது என்பதைப் பற்றிப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்றுக் கொடுக்கிறார்கள்தான். ஆனால் வேகமாகப் படிப்பதற்கு ஒருவர் தனியாகத்தான் முயற்சி செய்ய வேண்டி இருக்கிறது.வேகமாகப் படிப்பவர்கள் எதையும் விரைவாகப் படித்து முடித்துவிடுவார்கள். படிப்பதற்கு இவர்களுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. நேரம் இருக்கிறது என்பதால் அவர்கள் மேலும் படிக்கலாம். மேலும் மேலும் படிக்கலாம்.