வீரம் விளைந்தது
வீரம் விளைந்தது
நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய் அவர்கள் எழுதியது. தமிழில்: எஸ்.இராமகிருஷ்ணன்.
இந்நாவலின் பாத்திரங்கள்யாவும் உண்மையானவை; சிலரின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டவை; பன்னாட்டு வாசகர்களின் உள்ளத்தைக் கவர்ந்த கதாநாயகனான பாவெல் கர்ச்சாகினின் பாத்திரம் ஆசிரியர் நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய் (1904-1936) இறுதி 12ஆண்டுகளில் வெகுவாக நோய்வுற்றிந்தார்.போர்முனையில் படட் காயத்திற்குப் பின் அவர் பார்வையிழந்து படுக்கைவாய்ப்பட்டார்.நடக்க இயலா விந்தையெனத் தோன்றினாலும் அவர் தம் வீரக்கதையை இளமை ,காதல், போராட்டம், பற்றியதும், முதலாவது சோவியத் நாட்டின் இளம் கம்யூனிஸ்ட் சங்க உறுப்பினாகளாகிய தம்மையும் தம் நண்பர்களையும் பற்றியதுமான இக்கதையை நோய்வுற்ற காலையில்தான் எழுதினார். தமது தலைமுறையைச் சார்ந்த சோவியத் இளைஞர்களின் 1915ம் ஆண்டு தொட்டு 1931ம் ஆண்டு வரையான வாழ்வை இப்புத்தகத்தில் விவரிக்கிறார் நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய்.
வீரம் விளைந்தது - Product Reviews
No reviews available