வரலாற்று மானிடவியல்
வரலாற்று மானிடவியல்
நமது மரபார்த்த வரலாற்றின் வழிநெடுக சிக்கலான விபத்துகளும், தவறுகளும், பொய்யான மதிப்பீடுகளும் மலிந்திருக்கின்றன. எனவே, அதற்கு எதிரான ஒரு புதுவகை வரலாற்றை எழுத வேண்டியது நமது காலத்தின் தேவையாகும். அது ஒற்றை வரலாறாக இருக்காது: பல நுண் வரலாறுகளாக இருக்கும். தற்சார்பற்ற அத்தகைய புதுவகை வரலாறுகளை எழுதுவதே 'வரலாற்று வரைவியல்' ஆகும்.
வளர்ந்து கொண்டிருக்கும் வரலாற்று வரைவியல், இன்றைய பின்காலனியச் சூழலில் ஒவ்வொரு தேசிய இனத்தின் இருத்தலுக்கும். அதன் எதிர்பார்ப்புகளுக்கும் தேவையானதாக இருக்கிறது. மறுவாசிப்பும் மீன் புரிதலுமற்ற எந்த ஒரு சமூகமும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதில்லை. எனவே, வரலாற்றை நுட்பமாக அறிவதற்கும் அறிவிப்பதற்கும் உரிய கருத்தியலை நாம் உருவாக்க வேண்டும். அதற்கான வாசிப்புத் தளத்தை இந்த நூல் முன்வைக்கிறது.
மானிடவியலைப் பொறுத்தவரை பழைய தடத்தைப் பின்பற்றாமல். புதிய தடங்களை உருவாக்குவதில் தொடர்ந்து இயங்கிவரும் இந்த நூலாசிரியர் இந்த நூலின் மூலம் புதிய எல்லைகளைத் தொட்டிருக்கிறார்: அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்பதை வாசகர் உணரலாம்.
வரலாற்று மானிடவியல் - Product Reviews
No reviews available