வண்ணங்களின் வாழ்க்கை

வண்ணங்களின் வாழ்க்கை
சுந்தரபுததன் அவர்கள் எழுதியது.சுந்தரபுத்தனின் நதி எல்லா திசையிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நூலில் அவர் தனது ஈரத்தால் கடந்திருப்பது ஓவியர்களின் பூமியை. வாழ்வு கொடுக்கும் எல்லா வலிகளையும் தாங்கி எழுத்திலும் எழுத்தின் உட்புறத்திலும் தொடர்ந்து இயங்குவதோடு கூடவே புதிய பிரதேசங்களிலும் தனது சக்தியை தொடங்கி வைக்கிறார். ஓவியர்களின் மொழி மறைவுக் குறிப்பகளால் ஆனது. சில வெளிப்படையான பேச்சுகள் வண்ணங்களால் நிறையக்கூடும்.அவர்களே தம் சதுரங்களை விட்டு வெளியேற விரும்பாத நிலையில் பத்திரிகைகளும் பொது ஊடகங்களும் ஓவியங்களை இன்னமும் தலைகீழாகவே பயன்படுத்திவருகின்றன. அவ்வப்போது தமிழ் எழுத்தில் யாராவது இப்படி எதையாவது தொடர்ந்து செய்வார்கள். சுந்தரபுத்தனின் கவனிப்புகள் புதிய தொடக்கம். யாருமற்றவர்களுக்காக யாருமற்ற இடத்திலிருந்து எழும் யாரோ உருவனின் குரல் இது. அதன் உள் ஒடுகிற நதி செழுமையை நாடுவது.