வாக்கு மூலம் (உயிர்மை)

வாக்கு மூலம் (உயிர்மை)
மற்றவர்களின் வரலாற்றை விட திரைப்படக் கலைஞர்களின் வரலாறு திரைப்படம் போன்றே சுவாரஸ்யங்களும், திருப்பங்களும் நிறைந்தது. இந்த நூலில் நண்பர் பைம்பொழில் மீரான் 40 திரைப்படக் கலைஞர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்திருப்பதன் மூலம் திரைப்படத்துறைக்குத் தன்னால் இயன்ற பங்களிப்பை செய்திருக்கிறார். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் வரலாறு தான். அதை மற்றவர்கள் எழுதும் வகையில் வாழும் வாழ்க்கை தான் சிறப்பானது. அந்த சிறப்பு மி்க்க வாழ்க்கையை வாழ்ந்த 40 கலைஞர்களின் வாழ்க்கைக்கு நெருக்கமாக நின்று அதனைச் சுருக்கமாக தந்திருக்கிறது இந்த நூல். சம்பந்தப்பட்டவர்களின் அருகில் அமர்ந்து அவர்கள் வாயாலேயே அவர்கள் வரலாற்றைக் கூறச் செய்து பதிவுசெய்யும் அற்புதம் அரிதாக நிகழும் ஒன்று. அப்படிதான் இதுவும் நிகழ்ந்திருக்கிறது. இது கிட்டத்தட்ட சுயசரிதைக்கு மிக அருகிலான ஒன்று.
- இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்