உப பாண்டவம்
உப பாண்டவம்
இதிகாசங்கள் மாபெரும் சிகரங்கள் போன்றவை.அவற்றைக் கண்களால் பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது.மலைகள் வளர்வதைப் பொல மெளனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அனத் அக இயக்கம் ரகசியமானது.இதிகாசத்தினுள் நுழைவதற்கு எண்ணிக்கையற்ற பாதைகள் இருக்கின்றன. அதன் துவக்கம், முடிவு என்பதெல்லாம் வெறும் கற்பனைப் புள்ளிகளே. மகாபாரதம் இந்தியாவின் நினைவுத்திரட்டு, பலநூற்றாண்டு கால மனிதர்களின் நினைவும் ச்கனவும் ஒன்று கலந்த மாபெரும் படைப்பு, காலத்தின் குரல் தான் கதையாக விரிகிறது.ஒவ்வொரு நாவலும் அதற்கான விதியைக் கொண்டிருக்கிறது போலும். உபபாண்டவம் வலியும் அகத்துயரங்களும் கொண்ட தழுவர மன எழுச்சியால் எழுதப்பட்டது.வாசகர்களின் பரந்த வாசிப்பிற்கும் பாராட்டுதலுக்கும் உள்ளான உப பாண்டவம் புதிய 4ஆவது பதிப்பாக வெளிவருகிறது.
எஸ்.ராமகிருஷ்ணளின் முதல்நாவல் உப பாண்டவம். இது மகாபாரதம் மீதான புனைவு. இந்நாவல் மகாபாரதத்தின் அறியப்படாத சுதாபாத்திரங்களை, அவர்களின் அகவுலகை விரிவாகச் சித்தரிக்கிறது.
இதிகாசங்கள் மாபெரும் சிகரங்களைப் போன்றவை. அவற்றைக் கண்களால் பார்த்து மட்டுமே அறிந்துக் கொள்ள முடியாது. மலை வளர்வதைப் போல மௌனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. தொடர்ந்து வாசிப்பதும் ஆழ்ந்து கரைந்து போவதன் வழியே தான் இதிகாசங்களைப் புரிந்து கொள்ள முடியும்.
வெளியான நாள் முதல் மிகச்சிறந்த வரவேற்பையும் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்ற இந்நாவல் தமிழின் மிகச்சிறந்த நாவல் வரிசையில் வைத்துக் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
உப பாண்டவம் - Product Reviews
No reviews available