உங்களுக்கு நீங்களே டாக்டர்

0 reviews  

Author: டாக்டர் ஷங்கர்

Category: உடல் நலம்

Available - Shipped in 5-6 business days

Price:  90.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

உங்களுக்கு நீங்களே டாக்டர்

லேசாக தலை வலித்தாலே ஸ்பெஷலிஸ்ட் டாக்டரிடம் ஓடி, ஸ்கேன் எடுத்து, இன்னும் பல சோதனைகளைக் கடந்து தலை வலியைக் கூட்டிக் கொள்கிற புதிய தலைமுறை நோயாளிகளின் காலம் இது. ஆனால் இந்த மண்ணில்தான் மகத்தான மருத்துவப் பாரம்பரியம் இருந்தது. சித்த வைத்தியம், ஆயுர்வேதம், யுனானி என பல மருத்துவ முறைகளும் இங்கு இருந்தன. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வந்த நவீன மருத்துவம், இவை அனைத்தையும் அசுரத்தனமாக கபளீகரம் செய்துவிட்டது. ‘எங்கோ வெளிநாட்டில் இருந்து வந்தது மட்டுமே நல்ல விஷயம்’ என மாறாத நம்பிக்கை கொண்டிருக்கும் நாம், நமது பாரம்பரியத்தை அலட்சியப்படுத்தி விட்டோம். இன்றைக்கு நவீன மருத்துவத்தின் பக்க விளைவுகள் தாங்காமல் பலரும் பாரம்பரியத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒன்றுதான் ‘அக்குபிரஷர்’. சீனாவிலிருந்து வந்த மருத்துவ முறை என இதை நினைத்துக் கொண்டிருக்கிற தமிழ் மக்களுக்கு, ‘இதுவும் நம் மண்ணிலிருந்து அங்கு போனதுதான்’ என்ற வரலாற்றைச் சொல்கிறார் டாக்டர் எம்.என்.சங்கர். புகழ்பெற்ற சித்தரான போகர் உருவாக்கிய பொன்னூசி சிகிச்சை முறையே ‘அக்குபஞ்சர்’. அதில் ஊசிகளுக்கு பதிலாக விரல்களைப் பயன்படுத்துவதுதான் ‘அக்குபிரஷர்’. அந்த சிகிச்சை முறைகள் பற்றியே இந்த நூல் விவரிக்கிறது. ‘குங்குமம்’ இதழில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்தப் பகுதி, பிறகு நூல் வடிவம் பெற்றது. * கட்டை விரல் தவிர்த்து, இரண்டு கை விரல் நகங்களையும் தினமும் காலையும் இரவிலும் 10 நிமிடங்கள் உரசச் செய்தால் முடி உதிர்வது நிற்கும். * இடது கை கட்டைவிரலை வலது கை விரல்களாலும், வலது கை கட்டைவிரலை இடது கை விரல்களாலும் பிடித்து 30 முறை சுழற்றினால் தலைவலி குணமாகும். * காதின் முன்புறமாக கன்னத்தை ஒட்டி இருக்கும் மூன்று அக்குபுள்ளிகளை அழுத்திக் கொடுத்தால், செல்போன் பேசுவதால் ஏற்படும் காது பிரச்னைகள் சரியாகும். * கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஐஸ்கட்டியை சில நிமிடங்கள் வைத்தால் பல்வலி பறந்து போகும். இப்படி இந்த நூல் முழுக்க எளிமையான மருத்துவக் குறிப்புகள் ஏராளம் உண்டு. சில ஆண்டுகளிலேயே பல பதிப்புகளைக் கண்டு விற்பனையில் சாதனை புரிந்துவரும் நூல் இது.

உங்களுக்கு நீங்களே டாக்டர் - Product Reviews


No reviews available