உலகமயமாக்கல்

உலகமயமாக்கல்
இந்நூலில் நாம் உலகமயமாக்கல் பல்லேறு வகைகளிலும் நமது தேசத்தின் மீது ஏற்படும் பாதிப்புகளைத் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். உலகமயமாக்கல் என்ற பெயிரில் எவ்வாறு அது நமது பொருளாதார உயரதிகாரத்தின் மீது சர்வதேச நிதிமூலதனத்தின் மரணப் பிடியை அதிகரித்துள்ளது.எவ்வாறு அது அரசியல்ரீதியான முடிவுகள் எடுப்பதைத் தீர்மானிக்கிறது.எவ்வாறு அது மக்களுடைய சமூகப் -பண்பாட்டு வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்தின் மீதும் ஊடுருவி வருகிறது.எவ்வாறு எந்த அளவுக்கு அது நமது பொருளாதாரத்தின்மீதும் மக்களிமீதும் தேசம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.சுதந்திரமான தேசம் எனக் கருதப்படக்கூடிய ஒரு பருண்மையான தாக்குதல் இன்றி இத்தகைய கொடூரமான தாக்குதல் எவ்வாறு சாத்தியம் என்பதையும் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம்.இறுதியாக உலகமயமாக்கலை எதிர்கொண்டுள்ள பல்லேறு அரசியல் சக்திகளின் பாத்திரங்களைப் பற்றியும் விடுதலை பெற்ற தற்சார்பு கொண்ட ஒரு இந்தியாவை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் விவாதிப்போம்.