உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம்
உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம்
இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பாதிப்பவர்களை அன்றாடங் காய்ச்சிகள் என்றுதான் சொல்வீர்கள்! அப்படித்தான் சொல்ல முடியும். இந்த உலகத்தில் பெரும் பணக்காரர் குடும்பம் மொத்தம் 20தான். அந்த இருபது குடும்பத்தின் கையில்தான் உலகமே அடங்கியிருக்கிறது என்பதை நூல் ஆசிரியர் வேங்கடம் விளக்கியுள்ளார். இந்த உலகத்தில் 752 கோடி பேர் மக்கள்தொகையில் வெறும் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் ‘மிக மிக...’ ரெக்கரிங் பணக்காரர்கள். அந்தக் குடும்ப உறுப்பினர்கள் அதிகபட்சமாக 6 ஆயிரம் பேர்தான். உலகில் உள்ள மொத்த அசையும் அசையாச் சொத்துகளில் பாதி இந்த 6 ஆயிரம் பேரிடம் இருக்கிறது. அதாவது பாதி உலகம் அவர்கள் கையில்; மீதிப் பாதி உலகம் அவர்களுக்கு அடங்கி இருக்கிறது. இந்தியா, சீனாவில் உள்ள அனைத்து சொத்துக்களின் மொத்த மதிப்பு இந்த 6 ஆயிரம் பேரில், முதல் ஆயிரம் பேரிடம் மட்டுமே இருக்கிறது. இந்த 20 குடும்பங்கள்தான் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ‘பேஸ்ட்’ முதல் பெஸ்ட் வரை கொடுத்து உலகை ஆட்டிப்படைக்கிறார்கள். வகையாகச் சிக்கிய எலியைப் பூனைக்குட்டி கவ்வுவதுபோல அவர்கள் நம்மைக் கவ்வியிருக்கிறார்கள். இந்த நூலைப் படித்தால் அவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்ளவாவது முயற்சிக்கலாம்!
உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் - Product Reviews
No reviews available