உங்கள் குழந்தை

உங்கள் குழந்தை
மருத்துவத்துறையின் ஆங்கிலத்திலேயே. எல்லாக் கலைச்செல்வங்களும், பெரும்பாலும் நம் நாட்டில் இருக்கின்றன. சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் முறையில் இவற்றைத் தமிழாக்கினால்தான், நம்
நாட்டின் பெரும்பாலான மக்கள் பலனடைய முடியும். இதே தோக்குடன்தான் இப்புத்தகத்தைத் தமிழாக்க இசைந்தேன்.இப்புத்தகத்தில், கருவுற்ற தாயைப் பேண வேண்டிய முறைகளும், பிறந்த குழந்தையின் பராமரிப்பும், பராமரிப்புத் தவறினால் ஏற்படும் வியாதிகளும், அதன் தீர்வு, தடுப்பு முறைகளும், மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சோவியத் யூனியனின் அப்பழுக்கற்ற சூழ்நிலை. சுற்றுப்புறங்களை மனதிற்கொண்டு எழுதப்பட்டிருந்தாலும், இது தம் நாட்டுக் குழந்தைச் செல்வங்களைப் பேணுவதற்கும் பயன்படும்,குழந்தைகளோ நாட்டின் செல்வங்கள்.அவர்களைப் பேணிக் காக்க
வேண்டியது அரசின், சமுதாயத்தின், பெற்றோர்களின் கடமையாகும். அந்த வகையில் இந்தப் புத்தகம் பெரிதும் உதவும்.