உடல் நலம் காக்கும் இயற்கை மருத்துவம்
உடல் நலம் காக்கும் இயற்கை மருத்துவம்
நீர் மருத்துவத்தின் மூலம் உடல் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது? சுவாசத்தைக் கட்டுப்படுத்துவதால் என்ன நன்மை? நிறங்களுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் தொடர்புஇருக்கிறதா? சூரியக் குளியலால் உடலுக்கு என்ன நன்மை? நோயின்றி வாழ இயற்கை மருத்துவம் காட்டும் வழிகள் என்ன? மனத்தை ஆள்வதற்குரிய பயிற்சிகள் என்னென்ன? இப்படி இயற்கை மருத்துவத்தின் அடிப்படை அம்சங்களையும், அதன் பலன்களையும் விரிவாக விளக்கிக் கூறுகிறது இந்தப்புத்தகம். இயற்கையோடு இணைந்த வாழ்வின் மூலமாகவே ஆரோக்கியமான வாழ்வு சாத்தியம் என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறது. நூலாசிரியர் இர. வாசுதேவன், �தமிழில் மருத்துவ இலக்கியங்கள்� என்ற தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். தற்போது சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளையில் பணிபுரிகிறார்.
உடல் நலம் காக்கும் இயற்கை மருத்துவம் - Product Reviews
No reviews available