உடலே உன்னை ஆராதிக்கிறேன்
உடலே உன்னை ஆராதிக்கிறேன்
.சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று என் இடது முழங்காலில் 'விண்..விண்..' என்று ஒரு வலி. ஏதேதோ மாத்திரைகளை விழுங்கியும் வலி போவதாகத் தெரியவில்லை. என் 'எச்சரிக்கையான' நடையைப் பார்த்துவிட்டு சென்னையின் ஜனத்தொகையில் ஒரு கணிசமான சதவிகிதம் என்னைத் துக்கம் விசாரித்துவிட்ட சூழ்நிலையில், சில நண்பர்கள் 'யோகா ட்ரை செய்து பாரேன்!' என்று யோசனை சொன்னார்கள்.
'இரவு பகல் என்பதெல்லாம் இல்லாமல் களேபரமாக அன்றாட வாழ்க்கையை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஜர்னலிஸ்ட், கட்டுப்பாடாக யோகா செய்ய முடியுமா?' என்ற சந்தேகம் விசுவரூபம் எடுத்தாலும், முழங்கால் வலி 'முயற்சி செய்' என்று ஆணையிட்டது. 'கிருஷ்ணமாச்சாரியார் யோக மந்திரம்' சென்று தேசிகாச்சாரைச் சந்தித்தது அப்போதுதான்!
ஒரே வாரத்தில், காலுக்கென்று சில எளிமையான யோகாசனங்கள் மூலம் அவர் என் வலியை போன இடம் தெரியாமல் துரத்தியது வேறு விஷயம்! அதேசமயம் அவர் நட்பு கிடைத்ததற்காக என் முழங்கால் வலிக்கு நான் நன்றி தெரிவிக்காமல் இருக்க முடியாது! அதற்குப் பிறகு ஓராண்டுக்கும் மேல் அவரிடம் யோகா கற்றுக்கொண்டேன்
உடலே உன்னை ஆராதிக்கிறேன் - Product Reviews
No reviews available