தொடரும் பயணம் : இலக்கிய வெளியில்
தொடரும் பயணம் : இலக்கிய வெளியில்
கலைகளையும்,இலக்கியத்தையும் கருத்தியலின் ஒரு பகுதியாக மட்டும் கண்ட அன்றைய மார்க்ஸிய வறட்டு வாதத்துக்கு எதிரான தீவிரமாக எதிர்வினையாற்றினார் வெ.சாமிநாதன் இல்லாத ஒரு இனத்தூய்மையை அடிப்படையாகக் கொண்டு மரபை முற்றிலும் வெட்டிச் செதுக்க முயன்ற திராவிட இயக்கத்தின் துவேஷப் பிரச்சார அரசியலிலும் குறுக்கல் வாதத்துக்கும் எதிராகப் போராடினார்.இருபெரும் அரசியல் தரப்புகளுக்கும் எதிரான அவரது தீவிரம் அவரைத் தனிமைப்படுத்தியது.
கலை இலக்கிய மரபுகள் தனித்தனியாக வளர்ச்சி பெற முடியாது என்று வெ.சாமிநாதன் கருதினார் மரபின் மீதான ஈடுபாடு,புதிய தேடும் இலட்சியவாதம் ஆகியவை ஒட்டுமொத்தமாக எல்லா கலை இலக்கிய தளங்களிலும் பிரதிபலிக்கும் ஒரு"சூழல்" கலை இலக்கிய ஆக்கதுக்கு முக்கியமானது என்றார் அதுவரை தமிழ் இலக்கிய சூழல் நுண்கலையாகப் பொருட்படுத்தியதில்லை.ஒவியம்,திரைப்படம்,இசை என்று பரவலாக இலக்கிய உலகின் கவனத்தை விரிய வைக்க வெ.சாமிநாதனால் முடிந்தது. இதில் அவர் ஒரு முன்னோடி.
தொடரும் பயணம் : இலக்கிய வெளியில் - Product Reviews
No reviews available