தியானமும் அன்பும்
மனம் சம்மந்தப்பட்ட எதுவுமே தியானமல்ல, மனதிற்கு ஒன்றே தியானம். தியானம் ஒரு அறிவியல் அல்ல, கலை அல்ல. அது ஓர் லாவகம் அவ்வளவுதான், உங்களுக்கு தேவைப்படுவதெல்லாம். கொஞ்சம் பொறுமை மட்டுமே.
தியானததைத் தவறவிட்டவர்கள், வாழ்வின் அனைத்து ஆடல்களையும் தவற விட்டவர்களாவார்கள். தியானம் என்பது, உங்களுடைய பரிசன்னத்திலேயே தீங்கள் ஆனந்தமாக இருத்தல்தான்,
8 முயற்சி எதுவும் தியானத்திற்கு உதவாது. பார்க்கப் போனால், அது அதற்கு பெருந்தடையே.
16 ஞாயம் என்றால், யாதுமே இல்லை என்பதை அறிந்துகொள்ளல்!
* தியானம் என்பது ஒரு வாழ்வியல் முறை அவ்வளவுதான்.
அன்பு.
அன்பு என்பது ஒரு இயல்பான தியானம்.
* அன்பு ஒவ்வொன்றையும் புனிதமாக்குகிறது. அலட்சியம் ஒவ்வொன்றையும் அருவறுப்பாக்குகிறது.
எந்தக் காரணமும் இன்றி, எல்லாவற்றையும் நேசியுங்கள். அதுவே உண்மையான அன்பு.
"ஓ" என் பைத்தியக்கார நண்பனே! அன்பு எப்பொழுதும் பலன் கருதாதது. இதுதான் அதன் புரியாதத் தன்மையும், புனிதத் தன்மையும்!
* நீங்கள் மறைந்தால்தான், அன்பு என்பது சாத்யம்!
அன்புக்காக, அனைத்தையும் தியாகம் செய்யுங்கள். ஆனால், வேறு எதற்காகவும் அன்பை ஒருபோதும் தியாகம் செய்யாதீர்கள்.