திருக்கயிலாய யாத்திரை - பொன்.காசிராஜன்
திருக்கயிலாய யாத்திரை - பொன்.காசிராஜன்
பயணம் என்பது பயனுள்ளதாக இருக்க வேண்டும். அது சுற்றுலாப் பயணமாக இருந்தாலும் சரி; ஆன்மிகப் பயணமாக இருந்தாலும் சரி. அந்த வகையில் இந்த நூல் இரண்டு வகைப் பயணங்களிலும் அடங்கும். இமயமலைத் தொடரில் உள்ள ஒரு மலை முடிதான் கயிலாயம். திபெத் நாட்டில் உள்ள இந்த மலையை இந்துக்கள் மட்டுமல்லாது பிற சமயத்தினரும் புனிதமாகக் கருதி யாத்திரையை மேற்கொள்கின்றனர். அரசாங்கமும் தனியாரும் இந்த யாத்திரை செல்வதற்கு பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து தருகின்றனர். அவற்றிலுள்ள சாதக பாதகங்களைச் சிறப்பாக எடுத்துக் கூறியிருக்கிறார் நூல் ஆசிரியர் பொன்.காசிராஜன். புகைப்படக் கலைஞரான இவர், இந்த நூலின் மூலம் எழுத்தாளராகவும் உருவெடுத்து இருக்கிறார். யாத்திரை செல்ல நினைப்பவர்களுக்கு கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள், பயணத்துடன் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள், உடல்நிலையைக் காக்க தேவையான மருத்துவக் குறிப்புகள் என்று திருக்கயிலாய யாத்திரை ஆரம்பிப்பதில் இருந்து முடியும்வரை வழித்துணையாக இருந்து நம்முடனே பயணிக்கிறார் நூல் ஆசிரியர். திருக்கயிலாய யாத்திரை ஒருமுறையேனும் சென்றுவிட நம்மைத் தூண்டிவிடுகிறார் என்றால் அது மிகையில்லை. நூலைப் படித்து முடித்தவுடன் நேரில் சென்று தரிசித்த அனுபவத்தை உங்களுக்குத் தருவதுடன் நீங்கள் நேரிலேயே சென்று தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் உங்களுக்கு நிச்சயம் ஏற்படுத்தும் என்பது உறுதி.
திருக்கயிலாய யாத்திரை - பொன்.காசிராஜன் - Product Reviews
No reviews available