திருடன் மணியன்பிள்ளை

0 reviews  

Author: இந்துகோபாலன்

Category: வாழ்க்கை வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  690.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

திருடன் மணியன்பிள்ளை

செய்யாத குற்றத்திற்காகச் சிறைத்தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது.திருட்டுகளில் ஈடுபடுகிறார்.இதற்காக  இவர் கையாள்கிறநுட்பங்கள் பிரமிக்க வைப்பவை; சாகசத் தன்மை கொண்டவை.போலீசில் பிடிபட்டதுமே உண்மைகளை ஒப்புக்கொண்டுவிடுகிற இவர்,தன் மீதான வழக்குகளுக்கு  வழக்கறிஞர்களை நியமித்துக் கொள்ளாமல் தானாகவே வாதாடுவார்.இவரது குறுக்கு விசாரணைகள்,போலீஸ் அதிகாரிகளும் நீதிபதிகளும் பயப்படுமளவுக்கு அமைந்திருக்கும். ஒருபுறம் மனிதத்தன்மையற்றதாக இருக்கும் இவரது செயல்பாடுகளினுள் ஏழைகள் மீதான உள்ளார்ந்த பரிவும் இடைகலந்திருக்கும்.

திருவனந்தபுரத்திலிருந்து ஒரு முஸ்லிம் பெண்ணை வாழ்க்கைத் துணையாகச் சேர்த்துக்கொண்ட இவர் ஒரு கட்டத்தில் திருடிய பொருளுடன் குடும்பத்தோடு மைசூருக்குச் சென்று வீதியோரத்தில் பாயாசக் கடை தொடங்குகிறார்.பிறகு யூசுஃப் பாட்சா எனும் பெயரில் அங்கே புகையிலை விவசாயத்தில் ஈடுபட்டு ஏழைப் பங்காளன் எனப் பெயர் பெறுகிறார்.பிறகு மைசூரில் இவரது வளர்ச்சி கர்நாடக மாநில முதலமைச்சருடன் சேர்ந்து ஹெலிகாப்டரில் பறக்கும் அளவுக்கு முன்னேறுகிறது.மக்களவைத் தேர்தலில் ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுகிறார்.மக்கள் செல்வாக்கு மிகுந்தவரும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த வருமாக இருப்பதால் ”மாண்புமிகு“கூட இவரது கைக்கெட்டும் தூரத்தில் வந்து நிற்கிறது.இந்நிலையில்,இவர் மைசூரிலிருக்கும் தகவலைக் கேள்விப்பட்டு வந்த கேரளக் காவல் துறை இவரைக் கைதுசெய்கிறது. ஒரே இரவுக்குள் சம்பாதித்த அத்தனைச் செல்வங்களையும் இழந்துவிட்டு வெறுங்கையுடன் கேரளத்திற்குக் கொண்டுவரப்படுகிறார் மணியன்பிள்ளை.

திருடன் மணியன்பிள்ளை - Product Reviews


No reviews available