திப்புவின் வாள்

திப்புவின் வாள்
இது கற்பனையான வரலாற்று புதினமில்லை, வரலாற்றை முறையாக ஆய்வு செய்து எழுதப்பட்ட நாவலாகும். இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டே திப்பு சுல்தான் டெலிவிஷன் தொடர் உருவாக்கப்பட்டது. தமிழ் வாசகன் திப்பிவின் வரலாற்றை அறிந்துகொள்வதற்கு இந்நூல் ஒரு திறவுகோலைப்போல அமைந்திருப்பது இதன் சிறப்பாகும். -எஸ்.ராமகிருஷ்ணன் இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாதவரான திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாற்றை, கதை வடிவில் பதிவு செய்யும் நாவல் இது. ஆங்கிலேய அரசுக்கு எதிராகத் துணிச்சலுடன் போரிட்டவர், போரில் பீரங்கிகளையும் ஏவுகணைகளையும் பயன்படுத்தியவர், விவசாய வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தந்தவர் என்று பல சிறப்புகளைக் கொண்ட திப்பு சுல்தானின் வரலாறு, இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது கண்முன்னே மீண்டும் நிகழ்வதை உணர முடியும். இந்திய வரலாற்றில் திப்பு சுல்தானின் பெயரை நீக்கத் துடிக்கும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்தப் புத்தகம் வெளியாகியிருக்கிறது. திப்பு சுல்தானின் அறிப்படாத வரலாற்றை அவர் சந்தித்த சவால்களை வெற்றிகளை துரோகத்தை அதன் பின்னிருந்த மனத்துணிச்சலை முறையாக ஆய்வு செய்து எழுதப்பட்ட நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு.